பெரியார் புகைப்படம் பொறித்த டீசர்ட் அணிந்து தன்னை ஒரு பெரியாரிஸ்ட் ஆக காட்டிக் கொண்டு, திராவிட சித்தாந்தங்களை முன்னெடுத்து தன்னுடைய பத்திரிகை துறையை தொடங்கியவர் மதன் ரவிச்சந்திரன். அடுத்தடுத்து தமிழ் தேசியம், இந்துத்துவம் கருத்துக்களை காலத்திற்கு ஏற்ப பேசி தன்னை அணைத்து தரப்பிடமும் பிரபலமாக அறிவதற்க்கு முக முடியை மாற்றி கொண்டே இருந்தார்.
அதேபோன்று பத்திரிக்கையாளராக பணியாற்றிய மதன் ரவிச்சந்திரன், எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர் வேலை செய்யவில்லை.பணி புரியும் இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக அங்கிருந்து வெளியேறி விடுவார்.பேட்டி ஒன்றில் மு க ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட சர்ச்சை குறித்த கேள்வியை தற்போதைய அமைச்சர் பொன்முடியிடன் கேள்வி எழுப்பினர் மதன்.
இந்த கேள்விக்கு பொன்முடி பதிலளிக்க முடியாமல் திணறினார், இதன் பின்பு மதன் ரவிச்சந்திரன் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் மான் கறி விவகாரத்தை வெளியில் கொண்டு வந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால் அவர் முழு திமுக எதிர்ப்பாளர் என்கிற நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் ஏற்பட, பெரும்பாலான பாஜகவினர் மதன் ரவிசந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கினர்.
பின்பு தன்னை பாஜகவில் இணைத்து கொண்ட மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருந்துவந்தார். அவருடைய பெண் தோழி வெண்பா என்பவருடன் மதன் டைரி என்கின்ற பெயரில் ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கினார். மதன் நீண்ட கால பயணத்தில் தொடர்ந்து அவருடன் இணைந்து பயணித்து வருகின்றவர் அவருடைய பெண் தோழி வெண்பா.
இந்நிலையில் கடந்த 2021 திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சில காலம் அமைதியாக இருந்து வந்த மதன் ரவி சந்திரன் அரசியல் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால் திடீரென பாஜகவை சேர்ந்த ஒரு முக்கிய தலைவரின் அந்தரங்க வீடியோவை தன்னுடைய மதன் டைரி யூ டுயூப்பில் வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், மேலும் இது போன்று பல பாஜக தலைவர்களின் வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது ஒரு ஸ்டில் ஆப்ரேஷன் என்றும், இதை தாங்கள் திட்டமிட்டு செய்து வந்ததாக, அந்த பாஜக தலைவரின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட பின்பு மதன் விளக்கம் கொடுத்தார். அந்த வீடியோ வெளியாகி அடுத்த ஒரு சில நாட்கள் பரபரப்பாக மதன் ரவிச்சந்திரன் அடுத்தடுத்து கருத்துக்களை பேசி வந்த நிலையில் திடீரென்று மதன் ரவிச்சந்திரன் என்ன ஆனார் என்கின்ற ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் காணாமல் போனார்.
சில காலம் அமைதியாக இருந்த மதன் ரவிச்சந்திரன் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது. பொதுவாக தற்பொழுது அரசியலில் முக்கிய பங்காற்றி வருவது சமூக வலைத்தளம், அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதர்க்கு, தங்களுக்கென்ன ஒரு ஐடி அணியினரை ஏற்படுத்தி, அதற்கு வார் ரூம் என்கிற பெயரில் அலுவலகம் அமைத்து வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், திமுகவில் பொறுப்பில் இல்லாத நபர்களை தேர்வு செய்து, தன்னுடைய செயல்பாடுகள் மற்றும் தன்னை மக்கள் மத்தியில் பிரபல படுத்த, தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அவர்களுக்கு எதிராக தகவல்களை சேகரித்து மக்கள் மத்தியில் அம்பலபடுத்த, அவருக்கென தனியாக ஐடி அலுவலம் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐடி பிரிவின் தலைமை பொறுப்பை மதன் ரவிச்சந்திரன் ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, அவருக்கு துணையாக அவருடை பெண் தோழி வெண்பா இதில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது.