நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சி 2025 வருடம் தொடங்கியது முதலே அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கிறது, ஏற்கனவே ஒவ்வொரு அமைச்சர்களாக அவர்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற பிடியில் சிக்கி வருகிறார்கள் மற்ற திமுக அமைச்சர்கள், தற்பொழுது அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வருமே 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில், அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

இதுவரை மோசடி புகார்களில் சிக்காத அமைச்சராக இருந்த மா சுப்பிரமணியன் தற்பொழுது சிக்கி இருக்கிறார். ஆனால் இந்த மோசடி வழக்கு சில வருடங்களாகவே நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிண்டி சிப்காட் அமைந்துள்ளது இவருடைய இந்த வீடு 1995ல் இருந்து குமார் என்பவருக்கு சொந்தமாக இருந்ததாக கூறபடுகிறது. அதாவது அரசாங்கம் விதிப்படி இந்த இடம் லீசுக்கு விடப்பட்டுள்ளது, அந்த இடத்தை குமார் என்பவர் லீசுக்கு எடுத்துள்ளார்.
அதாவது சுப்பிரமணியன் வசிக்கும் இந்த இந்த வீட்டின் இடம் முன்னாள் உரிமையாளரின் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் 2006 திமுக ஆட்சியில் சிக்கோ சொந்தமான இடங்களில் லீசில் இருப்பவர்கள் அவர்கள் பெயருக்கு சொந்தமாகி கொள்ளலாம், அல்லது அந்த இடத்தை லீசுக்கு எடுத்துவர்கள் ஒருவேளை இறந்து விட்டால், அவர்களின் பிள்ளைகள் பேருக்கு மாற்றலாம் என்கின்ற ஒரு சட்டம் வந்திருக்கிறது.
அப்போது அந்த இடத்துக்கு சொந்தமான குமார் என்பவருக்கு மா சுப்பிரமணியனின் மனைவி வாரிசு என்பது போன்று ஒரு போலிச் சான்றிதழை உருவாக்கி அந்த வீட்டை மா சுப்பிரமணியன் தன்னுடைய மனைவி பேரில் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் மா. சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்த போது தற்போது வசிக்கும் அந்த சர்ச்சை கூறிய வீடு தன்னுடைய மனைவி பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.
ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தலில் மா. சுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்த போது அந்த வீட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் 2021 தேர்தலில் நான் மா.சுப்பிரமணியனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ஒரு வேட்பாளர், மா சுப்பிரமணியனின் மாமனார் பெயர் சாரங்கபாணி என்றும் ஆனால் இந்த வீடு குமார் பேரில் இருந்ததால், போர்ஜரி செய்து குமாரின் வாரிசு மா சுப்பிரமணியனின் மனைவி என்று மாற்றி மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் அமைச்சர் தொடர்பான வழக்கை கிடப்பில் போடப்பட்டது இருந்தாலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கான வேலைகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்து வந்தார், இருந்தாலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மா சுப்பிரமணி மனைவியின் தந்தை பெயர் சாரங்கபாணி அப்படி இருக்கையில் குமாரின் வாரிசாக எப்படி இருக்க முடியும் என்பதை சுட்டி க்காட்டி,
மா சுப்பிரமணியனை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தும் போது மா சுப்பிரமணி மிகப் பெரிய சிக்கலில் சிக்கி அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும். மேலும் சாரங்கபாணியான மகள் எப்படி குமாரின் சொத்துக்கு வாரிசானார் அப்படியானால் இது தொடர்பான ஆவணங்கள் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் சுப்பிரமணியன் போலியாக தயார் செய்தாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.