தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி இருவரும் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரும் காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்பு இருவரும் இரண்டு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு மதமாக இருந்தாலும் கூட மதங்களைக் கடந்தது காதல் என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் தங்களில் காதலில் உறுதியாக இருந்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இந்த தம்பதியினருக்கு இன்பநிதி என்கின்ற ஒரு ஆண் குழந்தையும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் சினிமாவில் தயாரிப்பாளராக நுழைந்த உதயநிதி ஸ்டாலின் எதிர்பாராத விதத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்கள் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மனைவி விருப்பத்திற்கு ஏற்ப தன்னை போன்று தன்னுடைய மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப முழு சுதந்திரத்தை கொடுத்து வரக்கூடியவர்.
அந்த வகையில் தன்னுடைய மனைவி சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்கின்ற ஆசையை நிறைவேற்றும் வகையில், வணக்கம் சென்னை என்கின்ற படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து மனைவியை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்கிற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் உண்டு.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அரசியல் வட்டாரத்தில் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றுவார் என்பது உறுதியான நிலையில், அவரை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைவர் யார் என்கிற போட்டி தற்பொழுது கடுமையாக நடந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து விளையாட்டு பயிற்சி எடுத்து ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ள இன்பநிதி அவருடைய பெண் தோழியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வந்தது.
ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த புகைப்படத்தை ஒ அதிகம் பகிர்ந்து இன்ப நிதி அவருடைய பெண் தோழியுடன் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் வந்தனர். பொதுவாக அரசியலில் இருக்கக்கூடிய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட விமர்சனம் செய்யக்கூடாது என்கின்ற ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அதை தாண்டி ஒரு அரசியல் தலைவரின் மகன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய ஒரு இளைஞன் சக பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கேலி கிண்டல் செய்து வந்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து ஒரு சிறந்த தாய் என்பதை நிரூபித்து விட்டார் கிருத்திகா உதயநிதி.
இன்பநிதியின் தாய் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், அவர் எந்த ஒரு சம்பவங்களையும் குறிப்பிடாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம் , இயற்கை அதன் முழு மேன்மையை புரிந்து கொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று, என பதிவிட்டு தன்னுடைய மகனின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும், தன்னுடைய மகனை விமர்சனம் செய்தவர்கள் தலைதெறித்து ஓடுவது போன்ற சரியான பதிலடி கொடுத்து ஒரு சிறந்த தாய்க்கு முன்னுதரமாக திகழ்ந்துள்ளது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.