இந்தி எதிர்ப்பை மீண்டும் கையில் எடுத்துள்ள திமுக, இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 1 வருடமே இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழக மக்களை திசை திருப்பும் வகையில், பல்வேறு அரசியல் ராஜ தந்திரங்களை செய்து வருகிறது, ஆனால் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி போனதே என்று சொல்லும் வகையில், திமுகவின் இந்தி எதிர்ப்பு தொடங்கி அணைத்து அரசியல் நகர்வுகளையும் உடனுக்குடன் சுக்குநூறாக உடைத்து , மக்கள் மத்தியில் திமுகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி வருகிறது அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக.
சமீபத்தில் இந்தி மொழி குறித்து பேசிய கனிமொழி, இந்தி படித்தால் என்னென்னவோ கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்ன கிடைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்த கனிமொழி, நானும் டெல்லியில்தான் இருக்கிறேன் இந்தி தெரியாததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை. உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் தமிழ், ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்த கனிமொழி.

அதனால் உத்தர பிரதேசத்திலும் பீகாரிலும் தமிழ் சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு நாங்கள் தேவையாக இருக்கும் போது எங்கள் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். இந்தியை படித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை” என திமுக எம்.பி. கனிமொழி பேசி இருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக முக்கிய தலைவர் ஹெச்.ராஜா,
திமுக செயற்குழு கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கும் போது CBSE பள்ளிகளை நடத்தும் திமுக தலைவர்களிடமும் இதே கேள்வியை நீங்கள் ஒருமுறையாவது கேட்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய சந்தேகத்திற்கான பதில் உங்கள் கட்சித் தலைவர்களிடம் இருந்தே கிடைத்திருக்கிருக்கும் என கனிமொழிக்கு பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா.
மேலும் கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகளை அழைத்து சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பிரென்ச் மொழி கற்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திமுகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவர்கள் கையெழுத்திட்டாரே அவர்களிடமும், தன் மகன் கவின் பொய்யாமொழியை ஆழ்வார்பேட்டை International Curriculam School ல் சேர்த்து பிரென்ச் மொழி படிக்க வைத்திருக்கிறாரே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமும், பிரென்ச் மொழி படித்தால் அப்படி என்ன கிடைக்கும் என கேட்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் ஹிந்தி மொழி குறித்து கேள்வி கேட்பதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என கனிமொழிக்கு தரமான பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா.
மேலும் கனிமொழியை நோக்கி முதலில் நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்? உங்கள் மகன் திரு.ஆதித்யா அரவிந்தன் எந்த பள்ளியில் படித்தார்? நீங்களும், உங்கள் மகனும் படித்த பள்ளியில் ஹிந்தி பாடத்திட்டமாக இல்லை என்பதை உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா? என சரமாரியாக கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா.
மேலும் கனிமொழி அண்ணன் மகள் திருமதி.செந்தாமரை சபரீசன் அவர்கள் நடத்தும் வேளச்சேரி சன்ஷைன் மாண்டிசோரி பள்ளியில் ஹிந்தி பாடத்திட்டமாக இல்லை என்பதை உங்களால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா.
மேலும், ஆதாயத்திற்காக உங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைப்பீர்கள்!
உங்கள் கட்சியினர் நடத்தும் CBSE பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பீர்கள்! ஆனால் அரசியலுக்காக ஏழை குழந்தைகள் அரசு பள்ளிகளில் மும்மொழி கற்பதற்கு மட்டும் அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பீர்களா? என இந்திக்கு எதிர்ப்பு குரல் கொடுக்கும் கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பிய ஹெச், ராஜா.
மேலும் போதும் உங்கள் மொழி நாடக அரசியல்!! மொழிப்பற்று என்கிற பெயரில் தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து தமிழையும், தமிழகத்தையும் திமுக அழித்துக் கொண்டிருப்பது போதும்!! திமுகவின் மொழி நாடகம் மட்டுமல்ல! திமுகவின் அரசியல் பயணமும் 2026ல் முடிவுக்கு வரும்!! என இந்தியை படித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை” என பேசிய திமுக எம்.பி. கனிமொழிக்கு தக்க பதிலடி கொடுக்து தரமான சம்பவம் செய்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.