அதிரடியாக இறங்கும் கனிமொழி ஆதரவாளர்கள்… உதயநிதிக்கு வைத்த செக்…

0
Follow on Google News

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி வருகிறது திமுக தலைமை. ஏற்கனவே திமுக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்க துறை இறுக்கி பிடித்து வரும் நிலையில், தற்பொழுது கனிமொழி தன்னுடைய அரசியல் ஆட்டத்தை முதல்வர் குடும்பத்துக்கு எதிராக அடித்து ஆட தொடங்கிவிட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் அன்புக்குரிய மகளாக இருந்த கனிமொழி, தன்னுடைய ஆதரவாளர்கள் பெரும்பாலானோருக்கு 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி கொடுத்தார் கனிமொழி. அந்த அளவுக்கு கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை கனிமொழி செல்வாக்கு திமுகவில் மிக பெரிய அளவில் இருந்தது.

ஆனால் கருணாநிதி மறைவுக்கு பிறகு, படி படியாக ஓரம் கட்டப்பட்டு வந்தார். மேலும் ஒரு பக்கம் கனிமொழி ஓரம் கட்டப்பட்டு வந்த அதே நேரத்தில் உதயநிதிக்கு முக்கிய துவம் கொடுக்கப்பட்டு வந்தது திமுக முதல் குடும்பம். இதனை தொடர்ந்து ஒரு பக்கம் தன்னை ஓரக்கட்டப்படுவதை உணர்ந்த கனிமொழி, ராஜசபா எம்பியெல்லாம் இனி கதைக்கு ஆகாது, களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என முடிவு எடுத்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கனிமொழி.

இதனை தொடர்ந்து அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு சீட் மறுக்கப்பட்டார்கள், இதில் ஒரு சிலருக்கும் கூட தொகுதி மாறி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது கனிமொழிக்கு ஆதரவாக இருந்தால் இனி திமுகவில் சீட் கிடைக்காது, கட்சியில் பதவி உயர்வு கிடைக்காது என்கிற நிலை உருவானது, இருந்தாலும் பொறுமையாக தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வந்தார் கனிமொழி.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலின் திமுகவில் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த முடிவு செய்த கனிமொழி, தனக்கு இனி டெல்லி அரசியல் வேண்டும், வரும் 2026 தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு திமுக அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்த கனிமொழி, அதற்கான தேர்தல் பணிகளை தற்பொழுதே தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர்காலத்தில் தனக்கென சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு இல்லை என்றாலும் திமுகவில் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்ந்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தன்னுடைய ஆதரவலர்களுக்கு போட்டியிட சீட் வாங்கி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கனிமொழி, தன்னுடைய ஆதரவாளர்களை தொகுதியை தேர்வு செய்து வேலை செய்யுங்கள் வரும் 2026 சட்டசபையில் சீட் பெற்று தருவது என்னுடைய வேலை என நம்பிக்கை கொடுத்து, தன்னுடைய ஆதரவாளர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார் கனிமொழி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்நிலையில் முதல்வர் மற்றும் உதயநிதி ஆகியோர் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக மூத்த தலைவர்கள், மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் கனிமொழிக்கு ஆதரவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், எங்கே உதயநிதிக்கு போட்டியாக கனிமொழி உருவெடுத்து விடுவார் என்கிற அச்சத்தில் இது வரை ஓரம் கட்டப்பட்ட கனிமொழி, பொறுமையாக தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி தற்பொழுது அடித்து ஆட தொடங்கியுள்ளார் கனிமொழி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here