கனிமொழிக்கு பாஜகவுடன் தொடர்பு…புட்டு புட்டு வைத்த நிர்மலா சீதாராமன்…

0
Follow on Google News

பாஜக மத்திய அமைச்சர்கள் பலருடன் திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளது என ஏற்கனவே பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடன் சில திமுக எம்பிகள் தொடர்பில் இருப்பதாகவும், சில விஷயங்களுக்கு மெஸேஜ் செய்து தனக்கு நன்றி சொல்வார்கள் என தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆனால் கடைசி வரை யார் அந்த திமுக எம்பி என்பதை பெயர் சொல்ல மறுத்து விட்டார், இந்த நிலையில் ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் திமுக முக்கிய தலைவர்கள் அடிக்கடி டெல்லி செல்வது பாஜக அமைச்சர்களை ரகசியமாக சந்திக்க தான் என்கிற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அதை உண்மையாக்கும் பட்சத்தில் திமுக எம்பி ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தொடர்பில் இருக்கும் அந்த திமுக எம்பி யார் என்கிற விவாதத்திற்கு பதில் கிடைக்கும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அமைச்சருடன் தொடர்பில் இருக்கும் அந்த எம்பி ஒரு பெண் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த திமுக பெண் எம்பி யார்.? கனிமொழி அல்லது தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இருவரில் யார் என்பது பற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில் பல தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2023ம் ஆண்டு தமிழகத்தில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, மத்திய நிதி அமைச்சர் தூத்துக்குடியில் அந்த தொகுதி திமுக எம்பி உடன் ஆய்வு மேற்கொண்டார், அந்த திமுக பெண் எம்பி தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தொடர்பில் இருக்கிறார், என டெல்லியில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து, அது வேறு யாரும் இல்லை கனிமொழி எம்பி தான் மத்திய அமைச்சர் உடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

மேலும் கனிமொழி எம்பி பிறந்தநாள் அன்று பாஜகவில் இருக்கும் பல தேசிய தலைவர்கள் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு டெல்லியில் உள்ள பல பாஜக தலைவருக்கும் கனிமொழிக்கு திரைமறைவில் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கும் டெல்லி வட்டாரங்கள். குறிப்பாக திமுக கட்சிக்குள், திமுக அரசாங்கத்தில், திமுக குடும்பத்தில் என இவை அனைத்திலும் என்ன நடக்கிறது என்பது அனைத்துமே டெல்லி பாஜக தலைமைக்கு நன்கு தெரியும் என்றும்.

அதே நேரத்தில் திமுகவில் உதயநிதிக்கு முக்கிய துவம் கொடுத்து, கனிமொழி ஓரம் கட்டப்பட்டு வருவது என கனிமொழிக்கு எதிராக நடக்கும் பல செயல்களை கனிமொழி மனம் விட்டு டெல்லியில் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்வர் என்றும், அவர் வேறு யாரும் இல்லை சரத்பவார் மகள் சுப்பிரியா எம்பி தான் என தெரிவிக்கும் டெல்லி வட்டாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கனிமொழிக்கு மிக நெருங்கிய நண்பர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் தான் சரத்பவார் மகள் சுப்பிரியா என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

மேலும் கனிமொழியை திமுகவில் இருந்து ஓரம் கட்டும் வேலையை திமுக முதன்மை குடும்பம் செய்து வருகிறது என்கிற விமர்சனம் இருந்து வரும் நிலையில், தற்பொழுது கனிமொழி எம்பி பாஜக அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறார் என டெல்லி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல், முதன்மை குடும்பத்துக்கு இடியாய் விழுந்த செய்தியாக அமைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் கனிமொழி மிக சாதுர்யமான அரசியல் வாதி என்றும் அதனால் தான் முக அழகிரியை திமுகவில் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்தியது போன்று கனிமொழியை முதல் குடுமபத்தினரால் அப்புறப்படுத்த முடியவில்லை என்றும், அந்த வகையில் தனக்கு திமுகவில் உட்கட்சி பிரச்சனையை எதிர்கொள்ள எதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என்பதால் தான் டெல்லி தலைமையிடம் கனிமொழி தொடர்பில் இருக்கிறார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here