கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜோதிமணி ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காததால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஜோதிமணி வெளிப்படையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில், தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள்.
எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என ஜோதிமணி காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக பகிரங்கமாக குற்றசாட்டுகளை வைத்த ஜோதிமணிக்கு எதிராக தனது ஆதரவாளர் கோபண்ணா மூலம் பதிலடி கொடுத்தார் கே எஸ் அழகிரி, அதில் 2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ? என தெரிவித்த கோபண்ணா,
மேலும் கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. கே.எஸ் அழகிரி ஆதரவாளர் கோபண்ணா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்தே கே.எஸ். அழகிரி மற்றும் ஜோதிமணி இருவருக்கும் கோஷ்டி பூசல் உச்சகட்டமாக நடந்து வரும் நிலையில், தொடர்ந்து கே.எஸ். அழகிரி குறித்து புகார் மேல் புகார் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஜோதிமணி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்று 9 தொகுதிகளில் வெற்றி பெற செய்தார்.
10 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முக்கிய காரணம் திருநாவுக்கரசின் அரசியல் நகர்வுகள் தான் என்கிறார்கள்.ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 25 தொகுதிகள் மட்டுமே கே.எஸ் அழகிரி தமையிலான காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. மேலும் கே.எஸ்.அழகிரி தலைவராக தொடர்ந்தால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்காது என்கிற புகார் ராகுல்காந்திக்கு சென்றுள்ளது.
மேலும் சமீபத்தில் சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கோஷ்டி சண்டை சந்தி சிரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலன காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கே.எஸ் அழகிரியை மாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு புகார் அனுப்பி வரும் நிலையில், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வரும் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு அடுத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது, ஜோதிமணி காங்கிரஸ் தலைவராவது பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.