நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தமிழகமே உற்று நோக்கி பார்க்கப்பட்டு வரும் அளவுக்கு கோவை தொகுதி நாளுக்கு நாள் அங்கே போட்டியிடும் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதாவது இந்தியா – பாக்கிஸ்தான் கிரிக்கெட் பார்க்கும் பொழுது எப்படி ஒவ்வொருவருடைய மனநிலை இருக்குமா அதுபோல், கோவை தொகுதியில் வெற்றி பெற போவது யார் என்கிற எதிர்பார்ப்பு, ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படி பரபரப்பாக இருக்கும் மக்களை அமைதி படுத்தும் விதத்தில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற்று விட்டார் என உறுதி படுத்தும் விதத்தில் வெளியாகியுள்ளது முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள், அவர்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில், கோவை நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38.9% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும்,
அதற்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் 33.4 சதவிகித வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார், அதற்கு அடுத்தபடியாக அதிமுக வெறும் 18 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் மற்றும் நாம் தமிழர் கட்சி 6.8 சதவிகித வாக்குகளை பெறும் என கோவை தேர்தல் களத்தில் லயோலா கல்லுரி மாணவர்கள் எடுத்த கருத்து கணிப்பை வெளியிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தவர்கள்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் கருத்து கணிப்பின் படி வெற்றி பெறவில்லை என்றால், நாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தை இழுத்து முடிவிடுகிறோம் என்று சவால் விடுத்துள்ளார்கள் கருத்து கணிப்பில் ஈடுபட்ட நிறுவனத்தை சேர்ந்த லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியை கொங்கு மக்கள் இந்த தேர்தலில் ஓட ஓட விரட்டி அரசியலில் இருந்தே அப்புற படுத்த தயாராகிவிட்டார்கள் என்பது கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த கருத்து கணிப்பிற்கு பின்பு ஒப்பாரி வைக்க தொடங்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதெல்லாம் செல்லாது செல்லாது, அதெல்லாம் நாங்க தான் ஜெயிப்போம், என வடிவேலு காமெடி காட்சிகளில் வருவது போன்று, அடேய் அம்மா சத்தியமா நாங்க தாண்டா ஜெயிப்போம், எங்களை நம்புக்காடா என புலம்பி தவிக்கிறாரோ தவிர, கருத்து கணிப்பு நிறுவனம் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வில்லை என்றால் எங்கள் நிறுவனத்தையே இழுத்து மூடி விடுவோம் என சவால் விடுத்தது போன்று, கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்று விட்டால், அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன் என எஸ் . பி வேலுமணி சவால் விடுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று விட்டால், நம்முடைய அரசியல் வாழ்க்கையே முடிந்து போய் விடும் என்பதை நன்கு உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலையை வீழ்த்த திரைமறைவில் அவர்களின் பங்காளி கட்சியான திமுகவுடன் கை கோர்த்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நம்ம தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, அண்ணாமலை வெற்றி பெற கூடாது, அந்த வகையில் கோவை தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்யுங்கள் என கோவையில் உள்ள அதிமுகவினருக்கு எடப்பாடி மூலம் சென்ற தகவலால் தற்பொழுது கோவை அதிமுகவினர் மிக பெரிய குழப்பத்தில் இருப்பதாக கோவை தேர்தல் களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா வழி வந்த நாங்கள் திமுவுக்கு வேலை செய்யமாட்டோம் என உண்மை அதிமுக தொண்டர்கள் தற்பொழுது எடப்பாடி மீது உள்ள கடும் அதிருப்தியில் காரணமாக பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது, மேலும் கோவை தொகுதியில் அண்ணாமலை செல்வாக்கு உயர்த்து வருவதை தேர்தல் களம் உறுதி படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.