மாவட்ட கட்டுப்பாடுகளில் இருந்து பாஜக ஐடி பிரிவு விடுவிக்கப்படுகிறதா.? பாஜக தலைமை அதிரடி வியூகம்..!

0
Follow on Google News

மாவட்ட கட்டுப்பாட்டில் இருக்கும் பாஜக ஐடி பிரிவுகளை விடுவித்து, பிற மாநிலத்தை போன்று சுதந்திரமாக மாநில தலைமை கட்டுப்பாட்டில் தமிழக பாஜக செயல்படுவது குறித்து பாஜக தலைமை சில அதிரடி உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன இந்த உலகில் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்கள், இந்த நவீன அரசியலுக்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் தங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அணைத்து அரசியல் காட்சிகளின் ஐடி பிரிவுகள் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக, முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக ஐடி பிரிவு ஆளும்கட்சியில் இருக்க கூடிய திமுகவுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது, ஆனால் பெரும்பாலன மாவட்டங்களில் உள்ள ஐடி பிரிவுகள் அந்தந்த மாவட்ட தலைமை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு ஐடி பிரிவு மாநில தலைமை கீழ் ஒருங்கிணைக்கபட்டு செயல்பட்டால் மட்டுமே சமூக வலைத்தளம் மற்றும் ஊடகம் வழியாக கட்சியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று வாக்கு வங்கிகளை உருவாக்க முடியும் என அக்கட்சினர் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

சில மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஐடி பிரிவு நிர்வாகிகளை, அந்தந்த மாவட்ட தலைமை அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அந்த மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்ளும் காது குத்து, சடங்கு, கெடா வெட்டு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வது, கட்சி நிர்வாகிகள் யாராவது அந்தந்த மாவட்ட தலைமை நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தால் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வது என இது போன்ற செயல்களுக்கு சில மாவட்ட ஐடி பிரிவு நிர்வாகிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஐடி பிரிவு, அந்தந்த மாவட்ட தலைமை நியமித்தவர்கள் என்பதால், மாநில ஐடி பிரிவு நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை வேலை வாங்க முடியாத தர்மசங்கடத்தில் இருந்து வருகின்றனர், இந்நிலையில் இதுவரை மத்திய பாஜக அரசின் மக்கள் நல திட்டங்கள், பிரதமர் மோடி அவர்களின் முக்கிய உரைகள், கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கிராமம் மற்றும் நகர் புற வளர்ச்சிக்கு செய்த சாதனைகளை பற்றி அந்தந்த மாவட்ட ஐடி பிரிவு மூலம் மக்களுக்கு கொண்டு சென்றால் மட்டுமே மாற்றகளை கொண்டு வர முடியும் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் தமிழகத்தில் உள்ள அணைத்து மாநில முக்கிய நிர்வாகிகள் பங்குபெறும் சென்னையில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஐடி பிரிவு தொடர்பான விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என்றும், இந்த ஆலோசனைக்கு பின்பு தமிழக முழுவதும் உள்ள மாவட்ட ஐடி பிரிவுகள், மாநில ஐடி பிரிவு தலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அதிகார வழங்கப்பட்டு, பாஜக மாநில தலைமையின் ஆலோசனை படி இனி வரும் காலங்களில் தமிழக பாஜக ஐடி பிரிவு மாநில தலைமை கட்டுப்பாட்டில் செயல்படும் என கூறப்படுகிறது.