அமித்ஷாவுக்கு சென்ற உளவு துறை ரிப்போர்ட்… 2026ல் திமுக காலி… இது தான் தமிழக அரசியல் நிலவரம்…

0
Follow on Google News

இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 1 வருடமே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திமுகவில் கூட்டணி கட்சிகள் எந்த பிளவும் இல்லை என்கிற ஒரு வெளி தோற்றம் இருந்தாலும் கூட, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் திமுக கூட்டணியில் பாமக உள்ளே வந்தால், விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கழட்டி விடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக தமிழக வெற்றி கழகம் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் தொல்.திருமாவளவன் என்கிறது அரசியல் வட்டாரம். அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில்.

இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போதைய தமிழக தேர்தல் களநிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் உளவு துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரிப்போர்ட்டில், ஆளும் திமுக அரசின் மீது அடித்தட்டு மக்கள் தொடங்கி, நடுத்தர மக்கள் என பெரும்பாலான தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக அதிகாலையில் வாங்கப்படும் பால் போன்ற அத்தியாவசிய பொருளின் விலை தொடங்கி, மின்சார கட்டணம் வரை, பல மடங்கு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதிகரித்து இருக்கிறது. இது மிக பெரிய அளவில் தமிழக மக்களுக்கு திமுக ஆட்சியின் மீது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திமுக அமைச்சர்கள் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வருவது, திமுக என்றாலே ஊழல் கட்சி தான் என தமிழக மக்கள் பேச தொடங்கியுள்ளார்.

அதே நேரத்தில் சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது என அமலாக்க துறை அறிவித்தது மக்கள் மத்தியில் மிக பெரிய அவப்பெயரை திமுகவுக்கு பெற்று தந்துள்ளது போன்ற தமிழக மக்கள் மன நிலை என்ன என்பது பற்றிய உளவு துறை ரிப்போர்ட் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கைக்கு சென்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்.

மெரினா சாகச நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டது, மேலும் 3 மாதம் கூட தாக்கு பிடிக்காமல் மலை வெள்ளத்தில் அடித்து இழுத்து சென்ற பாலம். பல்லாவரத்தில் பைப் தண்ணீரை குடித்து மக்கள் பாதிக்கப்பட்டது, குறிப்பாக ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கு குழாய் பைப் உள்ளது. ஆனால் பைப்பில் தண்ணீர் வரவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது.

பல இடங்களில் ஜல் ஜீவன் திட்டத்தின் பூமிக்கு மேலே பைப் இருக்கிறது, பூமியை தோண்டி பார்த்தால் தண்ணீர் வருவதற்கான எந்த ஒரு பைப்பும் இல்லை. இதையெல்லாம் மக்களுக்கு நினைவு படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு எதிராக பேசவேண்டும் என்கிற ரிப்போர்ட்ம் அமித்ஷா டேபிளுக்கு உளவு துறை மூலம் ரிப்போர்ட் சென்றுள்ளது என கூறப்படுகிறது.

குறிப்பாக திமுக ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உள்ளதை சுட்டி கட்டியுள்ள உளவு துறை ரிப்போர்ட், திமுகவை வீழ்த்த சரியான தலைமை , சரியான கூட்டணி அமைந்தால் நிச்சயம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து காலி செய்து விடலாம் என்கிற ரிபோர்டும் அமித்ஸாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here