நான் பழைய திருமா கிடையாது…சாதுர்யமாக காய் நகர்த்தி திமுகவுக்கு விடுத்த எச்சரிக்கை..

0
Follow on Google News

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிப்பதற்கும், திமுக இரண்டாவது முறையாக தோல்வியை தழுவுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது அப்போது மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நல கூட்டணி கட்சிகள் தான், இந்த கூட்டணியில் திருமாவளன், வைகோ கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விஜயகாந்த் ஆகியோர் முக்கிய பங்காற்றினார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்த தேமுதிக தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம் பெற்றனர்,இதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சிக்கு காக்க வைத்து, அணைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பின்பு, கடைசி நேரத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாமக தங்களுடைய கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது திமுக, அப்படி பாமக தங்கள் கூட்டணியில் இடம் பெற்றால் திருமாவளவனை கூட்டணியில் இருந்து கழட்டி விடும் நோக்கில் இருந்தது திமுக தலைமை. ஆனால் பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. இதனால் திமுக கூட்டணியில் தன்னை தக்க வைத்துக் கொண்டார் திருமாவளவன்.

அதே போன்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு மட்டும் இறுதியாக தொகுதிகளை ஒதுக்கியது திமுக, இப்படி ஒவ்வொரு முறையும் விடுதலை சிறுத்தை கட்சிகளை அலட்சியப்படுத்திய வந்துள்ளது திமுக தலைமை. தற்பொழுது அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து அவர்களுக்குள் பல பிரச்சனைகள் நடந்துள்ளது, அதிமுக கூட்டணி காட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி வருகிறது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பாமக திமுக கூட்டணியில் இடம்பெரும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் கழட்டி விடுவதற்கான வாய்ப்புகளும் நிச்சயம் உண்டு, இதற்கு காரணம் பாமக மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் அங்கம் வகிப்பது சாத்தியப்படாது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக திமுகவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் திருமாவளவன் பேசியுள்ளது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்.? திரை துறை கார்ப்பரேட் மையத்துக்கு இணையாகிக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள் இயக்குனர்கள் பாதிக்கப்படுகிறார்கள், இது தொழில் போட்டி மட்டுமல்ல தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாகும். யாருக்கும் எதிராக பேசவில்லை, எனக்கு சமூக பொறுப்பு உள்ளது என திருமாவளவன் யாரையும் குறிப்பிடாமல் பேசி இருந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தான் திருமாவளவன் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

வரும் 2024 தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போன்று 2 தொகுதிகள் ஒதுக்கி விடுதலை சிறுத்தை கட்சியை தக்க வைத்து கொள்ள வில்லை என்றால், மீண்டும் திமுகவுக்கு எதிராக ஒரு மக்கள் நல கூட்டணி உருவாகும் என மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் தான் திருமாவளவனின் இந்த பேச்சு அமைந்துள்ளதாக பார்க்க படுகிறது.