100 நாட்கள் திமுக ஆட்சியில் அடித்தது எவ்வளவு.? புதிய ஆளுநர் கையில் அமைச்சர்கள் லிஸ்ட்..! தாக்கு பிடிக்குமா திமுக ஆட்சி…

0
Follow on Google News

சிபிஐ, ஐபி, கூட்டு உளவுக்குழு என உளவு நடவடிக்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் புதியதாக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி. கேரள மாநிலத்தில் காவல்துறையில் மாவட்ட எஸ்.பி, டிஐஜி ஆகிய பொறுப்புகளில் இருந்தவர். தற்போது தீடிரென நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், கே எஸ்.அழகிரி, திருமாவளவன் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக தலைமையின் வலியுறுத்தலின் காரணமாக தான் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி எதிராக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக. தற்போது கடும் போராட்டத்துக்கு பின் ஆட்சியை பிடித்துள்ள நிலையில். பதவி ஏற்ற முதல் நாளே பெரும்பாலான அமைச்சர்கள் அந்தந்த துறை ரீதியாக வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அமைச்சர் திமுக ஆட்சி அமைத்த அடுத்த 15 நாட்களில் அவர் துறை சார்ந்த தமிழகம் முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளிடம் மாதம் தோறும் தனக்கென ஒரு குறிப்பிட்ட தொகை வருவதற்கு உதரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் 100 நாட்களை கடந்த திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை தங்கள் உளவுபிரிவு உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வந்த மத்திய அரசு . கடந்த 100 நாட்களில் மட்டும் அமைச்சர்கள் நடத்திய வசூல் வேட்டையில் எவ்வளவு பணம் சம்பாரித்துள்ளார்கள் என்கிற தகவல் அடங்கிய திமுக அமைச்சர்கள் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து அந்த பட்டியல் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்களின் கைக்கு வந்துள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சி ஒரு வருடம் முடியும் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு. வசூல் வேட்டையில் ஈடுபடும் அமைச்சார்களை கட்டம் கட்டி அதன் பின்பு அதிரடி ஆட்டத்தை நிகழ்த்தலாம் அதுவரை அவர்கள் ஆட்டம் தொடரட்டும் என்கிற முடிவில் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும். எனவே திமுக ஆட்சி முதலாம் ஆண்டு நிறைவு செய்யும் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யின் ஆட்டம் ஆரம்பமாகும் என கூறபடுகிறது.