எடப்பாடி ஆணவத்திற்கு விழுந்த பலத்த அடி.. 8 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அதிமுக… எந்தந்த தொகுதிகள் தெரியுமா.?

0
Follow on Google News

நடந்து கொண்டிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தேர்தல் முடிவு இன்னும் வெளிவராத நிலையில் அதிமுகவின் கட்சி பூசல் திரைமறைவில் உச்சகட்டம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தானே ஒரு ஆளுமை என நினைந்து கொண்டு, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என சூளுரைத்த எடப்பாடி தலைமையை முக்கிய கட்சிகள் யாரும் சீண்ட கூட இல்லை, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்த மன்சூர் அலிகான் கூட எடப்பாடி தலைமையிலான கூட்டணியை விரும்பாமல் தனித்து போட்டியிட்டார், அந்த அளவுக்கு மிக பரிதாபமாக இருந்தது இந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியின் நிலைமை.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வேலை செய்து வந்த அதிமுகவினர் கடைசி நேரத்தில் சீட் வேண்டாம் என ஜர்காகி பின் வாங்கினார்கள். அதாவது எடப்பாடி தலைமையை எந்த ஒரு கூட்டணி கட்சியும் ஏற்று கொள்ள வில்லை, தனித்து போட்டியிட எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா கிடையாது என்பதை நன்கு உணர்ந்த அதிமுக முக்கிய புள்ளிகள் தேர்தலில் சீட் வாங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தனர்.

அதாவது எடப்பாடி தலைமையிலான அதிமுக மண்ணைக் கவ்வும் என்று அந்த கட்சியினரே தெரிந்து கொண்டதால் பலரும் தலைமை சீட் கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டனர், மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கின்றவர்களுக்கு தான் சட்டமன்றத்திலும் சீட்டு கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆர்டர் போட்டும் எங்களுக்கு தேவையே இல்லை என்று பலரும் ஒதுங்கிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நிற்க தகுதியுள்ள நபர்களை கூட எம்பி தேர்தலில் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது மேலும் அதிமுகவை மிகப்பெரிய பின்னுக்கு தள்ளியது, குறிப்பாக இவரெல்லாம் ஒரு வேட்பாளர், இவருக்கெல்லாம் நம்ம வேலை செய்ய வேண்டும் என்பது தலையெழுத்தா.? என அதிமுகவினர் பலரும் பல தொகுதிகளில் தேர்தல் பணியாற்றவில்லை.

இந்நிலையில் நடந்து முடித்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய பலத்த அடியை அதிமுக வாங்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் எடப்பாடி அரசியல் சகாப்தமே முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு சுமார் 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக எந்தந்த தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என பரவலாக பேசப்பட்டு வரும் தொகுதிகளில்.

தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, வேலூர், பெரம்பலூர், மத்திய சென்னை உட்பட சுமார் 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும் மேலும் பல தொகுதிகளில் 3 வது இடத்திற்க்கு அதிமுக தள்ளப்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள், அந்த வகையில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமி விழுகிற பலத்த அடியாக தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.