முக்கிய நான்கு அமைசர்கள் பதவி காலி… திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…

0
Follow on Google News

தமிழக அமைச்சரவையில் அடுத்த இரண்டு நாட்களில் மாற்றம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தரப்பு மிக தீவிரமாக செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா.? இல்லை ஜாமின் வேண்டுமா.? என நீதிமன்றம் இறுக்கி பிடித்துள்ள நிலையில், வரும் திங்கள் கிழமைக்குள் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் செந்தில் பாலாஜி உடன் 4 அமைச்சர் பதவி காலியாவது உறுதியாகியுள்ளது, மேலும் இரண்டு அமைச்சர்கள் பதவி ஊசலாடி கொண்டிருக்கிறது, அந்த இரண்டு அமைச்சர்கள் பதவியும் பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் யாருடைய அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதை பார்க்கலாம், அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி பதவி நிச்சயம் பறிக்க பட இருக்கிறது, அவரை தொடர்ந்து சமீபத்தில் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிய பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிக்கபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக அமைச்சர் ஆர். காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் இவர்கள் இருவரின் அமைச்சர் பதவியும் பறிக்க பட இருக்கிறது. அடுத்ததாக இரண்டு அமைச்சர்கள் பதவி ஊசல் அடிக்கொண்டிருக்கிறது, அதாவது இவர்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம், அல்லது இவர்கள் இலாக்கா மாற்றப்பட்டு டம்மியான இலாக்கா கொடுக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வரிசையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணி மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி இருவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும், அல்லது இலாக்கா மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமைச்சர் மூர்த்தி மீது பல குற்றசாட்டுகள் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும், குறிப்பாக அவர் வகிக்கும் பத்திரப்பதிவு துறை மட்டுமின்றி கட்சி ரீதியாகவும் அவர் மீது பல குற்றசாட்டுகள் முதல்வர் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போன்று அண்ணாபல்கலை கழக விவகாரத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெயர் மிக பெரிய அளவில் அடிபட்டு, திமுகவுக்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது, இதில் இருந்தே மா.சுப்பிரமணி திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம், அல்லது அவருடைய இலாக்கா மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 4 அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட இருக்கும் நிலையில் இதில் மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முன் வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின், மேலும் தமிழரசி , எழிலன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க இருக்கிறது, அமைச்சர் மூர்த்தி பதவி பறிக்கப்பட்டால், மதுரையில் இருந்து கோ தளபதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது, அதாவது செந்தில் பாலாஜி வகித்து வரும் மின்சாரம், மற்றும் கலால் மற்றும் ஆயத்தீர்வு இலாக்கா அமைச்சர் பி.டி.ஆர் வசம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமைச்சர் கே என் நேரு, மற்றும் எம் ஆர் கே பன்னீர் செல்வம் ஆகியோர் இலாக்கா மாற்றம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here