தோல்வி அடைந்தாலும்… கோவை எம்பி அண்ணாமலை தான்… ஆளும் தரப்பை கதி கலங்க வைத்த எதிர்பாராத ட்விஸ்ட்…

0
Follow on Google News

2024 மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பாஜக கூட்டணி கணிசமான எண்ணிக்கையில் வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதுவரை எந்த ஒரு பாஜக மாநில தலைவரும் செய்யாத சாதனையை அண்ணாமலை கோவையில் நிகழ்த்தியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் 5 சீட்டுகள் வாங்கிக் கொண்டு அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு 3.7% விழுக்காடு வாக்கு வாங்கிய பாஜகவை, தன் துணிச்சலான முடிவால் இந்த தேர்தலில் 11.2 விழுக்காடு வரை வாக்கு வங்கியை உயர்த்தி உள்ளார் அண்ணாமலை. தமிழக அரசியல் வரலாற்றில் பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு வாங்குவது இதுவே முதல்முறை! கூடுதலாக கோவையில் நேரடியாக களமிறங்கி ஆளும் கட்சியை கதிகலங்க வைத்துள்ளார் அண்ணாமலை.

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக என ஒரு பட்டாளமே களமிறங்கி பிரச்சாரம் செய்தது..! இது போதாது என திமுக கூட்டணிக்கு நேரடியாக ஆதரவளித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் சுற்றி சுற்றி திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்..!

இந்நிலையில் சிறிய கட்சிகளை மட்டுமே கூட்டணியில் இணைத்துக்கொண்டு தனி அளாக களமாடி ஆளும் தரப்பிற்கு ஆட்டம் காட்டியுள்ளார் அண்ணாமலை. மேலும் கொங்கு எங்கள் கோட்டை என தம்பட்டம் அடிக்கும் அதிமுகவை அவர்கள் கோட்டைக்குள் புகுந்து வேட்டையாடி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

திமுக வேட்பாளருக்கு செம டஃப் கொடுத்து 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ள அண்ணாமலை டெபாசிட் கூட வாங்க மாட்டார் என சிலாகித்த திமுகவினர் இதை சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை சொன்ன பதில் தான் இப்போது கோவை மக்களை பாச கயிற்றில் கட்டி போட்டுள்ளது. “கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு நான்கரை இலட்ச வாக்குகள் அளித்து அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்த அண்ணாமலை.

கூடுதலாக கோவை தொகுதி முன்னேற்றத்திற்கு என் உழைப்பை இரட்டிப்பாகவே எனக்கூறி கோவை மக்களுக்கு இன்பச் செய்தியை அளித்துள்ளார். இதன் மூலம் தான் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கோவை மக்களுக்காக எம் பி ஆக செயல்படுவேன் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் அண்ணாமலை, இத்தனை நாள் அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் பாஜக அதிக ஓட்டு வாங்குவது என விமர்சனம் செய்து வந்த அதிமுக அனுதாபிகள் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் ஆளைய காணோம்!

அண்ணாமலை தலைமையில் கூட்டணி அமைத்து 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை தாண்டி சாதனையை படைத்துள்ளது தமிழக பாஜக, மேலும்
மத்தியிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்கப் போவதில்லை! இத்தோடு பாஜகவிற்கு கூடுதல் நற்செய்தியாக தற்போது தென் மாநிலங்களிலும் பாஜக வலுப்பெற தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேரளாவிலும் பாஜக தன் வெற்றி கணக்கை இந்த தேர்தலில் தொடங்கியுள்ளது! தமிழகத்திலும் கணிசமான முறையில் வாக்கு வங்கியை உயர்த்தி இரண்டாவது இடத்திற்கு பல தொகுதிகளில் முன்னேறியுள்ளது! இவை அனைத்தும் அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதே நேரத்தில், ஆளும் தரப்பினர் 40 தொகுதிகளும் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் பாஜகவின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு அண்ணாமலையை சாதாரணமாக நினைத்து விட்டோம் என்கிற ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த தேர்தல் முடிவுகள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.