வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் பாஜக தற்போது இருந்தே தேர்தலுக்கான பணிகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறுமா.? இல்லையா.? என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கையில், பாஜக உடன் கூட்டணிக்கு தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வந்தாலும், பாஜக போட்ட கண்டிஷனில் காரராக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மார்ச் மாதம் இறுதி வரை அதிமுகவுக்கு டைம் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதாவது ஓ. பன்னீர் செல்வம், சசிகலா இருவரையும் உள்ளே கொண்டு வர வேண்டும், அப்படி ஒன்றிணைந்த அதிமுகவாக பாஜக கூட்டணிக்கு வரவேண்டும், மேலும் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் TTV தினகரன் உட்பட யாரையும் பாஜக கூட்டணியில் இருந்து கழற்றி விட மாட்டோம் என அமித்ஷா அதிமுகவுக்கு கெடு விதித்து இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷாவிடம், அதிமுக தரப்பில் இருந்து பாஜக உடன் கூட்டணிக்கு எடப்பாடி ஓகே சொல்லிவிட்டார், ஆனால் ஓ பி எஸ், சசிகலா இணைக்க முடியாது, பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் TTV இருக்க கூடாது என்று எடப்பாடி தரப்பு தெரிவிக்க, இதெல்லாம் சரிப்பட்டு வராது என அமித்ஷா பதிலடி கொடுத்து அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், எடப்பாடி தலைமையிலான அதிமுக இல்லாத பாஜக தலைமையிலான கூட்டணியுடன் வரும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிறோம், அதற்கான கூட்டணியை வலுப்படுத்தும் வேலையை தொடங்குகள் என அண்ணாமலையிடம் தெரிவித்து இருக்கிறார் அமித்ஷா, அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அண்ணாமலை.
எங்கள் கஷ்ட காலத்தில் துணையாக இருந்தவர் அண்ணன் TTV தினகரன் அவர்கள், அவர்களை எப்போது விட்டு தர மாட்டோம் என பேசிய அண்ணாமலை, மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம், பாஜக நோட்டா கட்சி என்றவர்கள்,தற்பொழுது பாஜக உடன் கூட்டணி வைக்க வருகிறோம் என்கிற சூழலை உருவாக்கி இருக்கிறோம் என அண்ணாமலை பேசி இருந்தார்.
இந்நிலையில் இது மறைமுகமாக அதிமுகவை தான் குறிப்பிட்டு பேசுவது போன்று இருந்தாலும், இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது அண்ணாமலை எங்களை சொல்ல வில்லை என அண்ணாமலைக்கு மறைமுகமாக ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங்கள் ஒரே எதிரி திமுக தான் என ஒரே போடாக போட்டு பாஜக உடன் கூட்டணிக்கு தயார் என எடப்பாடி சிக்னல் கொடுத்தார்.
இந்நிலையில் தற்பொழுது ஒரு பக்கம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட இருக்கிறது, மறுப்பக்கம் எடப்பாடி க்கு எதிராக செங்கோட்டையன் தலைமையில் புரட்சி வெடித்து கொண்டிருக்கையில், பாஜகவிடம் டோட்டலாக சரண்டரான எடப்பாடி, நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்கிற நிலமையில் தற்பொழுது பாஜகவுக்கு தூது அனுப்பியுள்ளார். ஆனால் அதிமுக உடன் கூட்டணியே இல்லை, பாஜக தலைமையில் தான் கூட்டணி என அமித்ஷா உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எடப்பாடியை அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டு செங்கோட்டையன் தலைமையில் உள்ள அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க உதவி செய்யுங்கள், பாஜக தலைமையிலான கூட்டணியை ஏற்கிறோம் என எஸ்.பி வேலுமணி தற்பொழுது அமித்ஷாவுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.