தமிழகத்தையே உலுக்கி உள்ள டாஸ்மாக் மெகா ஊழல் குறித்த ஒரு துரும்பு தான் சமீபத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை என்றும், காரணம் டாஸ்மாக் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் , சுமார் 1000 கோடிக்கான ஊழலை தான் தற்பொழுது அமலாக்க துறை அதிகாரிகள் ஆதாரத்துடன் கண்டு பிடித்துள்ளார்கள், அடுத்தடுத்த நடவடிக்கை மூலம் இந்த விவகாரம் மிக பெரிய அளவில் வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையில், அந்த துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார் என கூறப்பட்டாலும், அமலாக்க துறையின் முக்கிய குறி செந்தில் பாலாஜி இல்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. காரணம் டாஸ்மாக் துறை சார்ந்த அமைச்சரான செந்தில் பாலாஜி ஒரு மீடியேட்டர் போன்று தான் செயல்பட்டுள்ளார் என்றும்.

அதாவது டாஸ்மாக் மூலம் வரும் ஊழல் பணம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தான் அந்த துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செல்லும், மற்ற படி இதில் பெரும் தொகை செந்தில் பாலாஜிக்கு மேல் இருக்கும் ஒருவருக்கு தான் சென்று இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்த அமலாக்க துறை, அந்த வகையில் தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டுள்ள சுமார் 1000 கோடி மெகா ஊழலில், ஊழல் பணம் பெரும் தொகை யாருக்கு சென்று இருக்கோ அவர் தான், இந்த ஊழலில் A 1 குற்றவாளியாக உள்ளே வருவார் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.
அந்த வகையில் இந்த டாஸ்மாக் ஊழல், இது முடிவு இல்லை, தற்பொழுது தான் ஆரம்பமே ஆகியிருக்கு, டாஸ்மாக் ஊழல் பணம் எங்கெல்லாம் யார் மூலமாக செல்கிறது, என்பவை அடுத்தடுத்து இது தொடர்பாக ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படும் பொழுது ஒவ்வொன்றாக வெளியே வரும் என்றும், குறிப்பாக சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் தான் ஊழல் பணம் விளையாடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த சமிக்கை தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அண்ணாமலை எச்சரிக்கையாக பேசும் ஒவ்வொரு விஷயமும், அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் அரங்கேறி வந்ததை பார்க்க முடிகிறது. குறிப்பாக டெல்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடந்து மதுபான ஊழல் போன்று தமிழகத்தில் நடக்கும் என்றும் அண்ணாமலை பேசி ஒரு சில நாட்களில் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து அமலாக்க துறை சோதனையில் இறங்கியது.
இந்த நிலையில் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒட்டு மொத்த திமுகவினரையும் தூங்க விடாமல் அதிரடி அரசியல் செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு லட்டு மாதிரி சிக்கி இருக்கிறது டாஸ்மாக் மெகா ஊழல். சுமார் 1000 கோடி மெகா ஊழலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அப்போது, இன்று எங்கள் போராட்டத்தை காவல் துறை தடுக்கட்டும்.
அடுத்து எங்கள் ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், முற்றுகை போராட்டம் முதல்வர் வீடாக கூட இருக்கலாம், டாஸ்மாக் அலுலகமாக இருக்கலாம் என தெரிவித்த அண்ணாமலை, எங்களை பொறுத்தவரை, டாஸ்மாக் உலகில் ACCUSED நம்பர் 1 முக ஸ்டாலினாக இருக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்துள்ள சமிக்கை தமிழக அரசியலில் மிக பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் முதல்வர் வீட்டை கூட முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.