திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி ஜெகத்ரக்சன் மற்றும் குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை குறி வைத்து அமலாக்க துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது, இதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ‘அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் & ப்ரூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மதுபான ஆலையுடைய அலுவலகத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர் அமலாக்க துறையினர்.
அமலாக்கத்துறை சோதனை நடத்தும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ‘அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் & ப்ரூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மதுபான ஆலை அலுவலகத்தில் தான் தமிழ்நாடு டாஸ்மார்க்கிற்கு தமிழ்நாடு டாஸ்மார்க்கிற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் கணக்கு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, தமிழ்நாடு அரசும், ஜெகத்ரட்சகனுச் சொந்தமான மதுபான ஆலைக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் டாஸ்மாக் கடைகளுக்கான கொள்முதல் நடைபெற்று வரும் ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை ஆவணத்திற்கும், நிறுவனத்திற்கும் ஆவணத்திற்கும் கணக்கில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த குளறுபடிகள் அனைத்துமே தற்போது நடந்த சோதனையின் மூலமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலையில் இருந்து தான் மாத மாதம் டாஸ்மார்கிற்கு அதிக அளவிலான மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும், மற்ற கம்பெனிகளை விட இந்த கம்பெனி தான் அதிக அளவில் லாபம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் இந்நிறுவனம் கமிஷன் அடிப்படையில் பல கோடி பணம் கொடுத்து வருவதாகவும் அமலாக்கத்துறை சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல எஸ்என்ஜே கால்ஸ் போன்ற போன்ற மதுபானம் ஆலையுடைய அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் & ப்ரூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ மதுபான ஆலை அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்படும் ஆவணங்களைக் கொண்டு இன்னும் பல மதுபான ஆலைகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக அரசு மது பான அலைகளில் கொள்முதல் செய்யும் மதுபானங்களில் குறித்த தகவல்களிலும் முறைகேடு செய்யப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதால், இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமாக இருக்க கூடிய எஸ்.என் ஜெயமுருகனும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியுள்ளார்.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அரசு மது ஒப்பந்ததாரரும், துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமானவருமான எஸ்.என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான snj குரூப்ஸ் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் உதயநிதியை குறி வைத்து தான் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், இது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் முதல்வர் குடுமபத்தினரை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.