அடுத்தடுத்து திமுக அமைச்சர்களை கைது செய்யும் வேலையில் ஆயத்தமாக மாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்களை இதுவரை கைது நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக அமித்ஷா இருந்ததற்கு முக்கிய காரணம், திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அதாவது தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிஸியாக இருந்ததால், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ள நிலையில்,

தற்பொழுது அவருடைய பார்வை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்கள் பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் கே என் நேரு அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய மகன் உட்பட அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கே என் நேருவின் சகோதரர் மற்றும் அவருடைய மகன் அலுவலகங்களில் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அரசியல் ரீதியாகவும் டெல்டா மண்டலத்தில் திமுகவின் வலுவான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருவது கே என் நேரு. அந்த வகையில் கே என் நேருவை அமலாக்கத் துறை மூலம் பாஜக டார்கெட் செய்வதன் மூலம் டெல்டா பகுதியில் திமுகவின் வெற்றியை பாதிப்படையச் செய்யலாம் என்கின்ற ஒரு வியூகத்தை அமித்ஷா கையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கே என் நேருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க துறை சோதனையில் கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் கே என் நேரு அவருடைய சகோதரர், அவருடைய மகன் ஆகியோருக்கு விரைவில் சம்மர் அனுப்பி விசாரணையை தொடங்க இருக்கிறது அமலாக்கத்துறை என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் குறிப்பாகவே அமலாக்கத்துறை பிடியில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்களை தேர்தலுக்கு முன் கட்டம் கட்ட மிக தீவிரமாக மத்திய உள்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்படும் அமைச்சர்கள் வரிசைகளில் முதலில் கே என் நேரு தான் வரும் ஜூன் மாதத்திற்குள் அமலாக்க துறை விசாரணை நடத்தி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கே என் நேருவை பாஜக விடும் போட்டுக் கொடுத்ததே செந்தில் பாலாஜி தான் என்றும் கூறப்படுகிறது. அதாவது டாஸ்மாக் அலுவலங்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது இரவோடு இரவாக டெல்லி சென்ற செந்தில் பாலாஜி அங்கே பாஜகவுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டு சரண்டர் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது கே என் நேரு குறித்த பல தகவல்களையும் பாஜகவிடம் செந்தில் பாலாஜி போட்டுக் கொடுத்து விட்டதாகவும் அதனால் தான் கே என் நேருவை குறி வைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதாவது கே என் நேருவுக்கும் செந்தில் பாலாஜிக்கும் அரசியல் ரீதியாக கடும் போட்டி இருந்து வந்த நிலையில் கே என் நேருவை சமயம் பார்த்து போட்டு கொடுத்து விட்டார் செந்தில் பாலாஜி என்றும் கூறப்படுகிறது