கைது செய்ய தேதி குறித்த அமலாக்கதுறை… டெல்லிக்கு படையெடுக்கும் முதல் குடும்பம்…

0
Follow on Google News

டாஸ்மாக் அலுவலகங்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதம் என டாஸ்மாக் நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சில முக்கிய உத்தரவு வழங்கி இருக்கிறது .

அதில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது இல்லை என்றும், அமலாக்கத்துறை தொடர்ந்து இந்த சோதனை குறித்து விசாரணையை நடத்தலாம் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. மேலும் டாஸ்மாக் தொடர்பான அமலாகத்துறை சோதனையில் அந்த துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த பக்கம் சென்றாலும் சுத்தி கண்ணிவெடியா இருக்கு என்று சொல்வது போன்று எல்லா பக்கமும் அமலாக்க துறை லாக் செய்து வருகிறது.

குறிப்பாக டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் இருந்து தப்பிக்க டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த விடாமல் தடுக்க எந்த பக்கம் போனாலும், அதை சிறப்பாக கையாண்டு வருகிறது அமலாக்க துறை. அந்த வகையில் டாஸ்மாக் ஊழல் குறித்த சோதனையில் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சாதகமாகவே உத்தரவுகளை வழங்கி இருக்கிறது.

அந்த உத்தரதீர்ப்பு நகலில் சுமார் 56 குறிப்புகள் அடங்கியிருக்கிறது. இதில் தமிழக அரசு வசமாக மாட்டிக் கொண்டது என்பதுதான் இந்த தீர்ப்பின் மூலம் அம்பலம் ஆகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜியை பாதுகாக்க தான் திமுக அரசு டாஸ்மாக் நிறுவன மூலம் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றுவிட வேண்டும் என்று வழக்குகளை தொடர்கிறது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும்,

செந்தில் பாலாஜி மாட்டிக்கொண்டால் திமுகவின் முதல் குடும்பம் மாட்டிக் கொள்ளும், அதனால் திமுகவின் முதல் குடும்பத்தை பாதுகாக்கத்தான் திமுக அரசு அமலாக்கத்துறை இந்த விசாரணையை தொடங்கக்கூடாது என்று தடை உத்தரவை பெறுவதற்கு பல வகைகளில் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசு துறையில் உள்ள இலக்காவான டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து இனி தடையின்றி சோதனை நடத்தலாம் அந்த ஊழல் தொடர்பாக விசாரணையை நடத்தலாம் என்று முழு அதிகாரத்தை அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் வழங்கி இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை ஒரு டார்கெட் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மே 10 தேதிக்குள் இந்த டாஸ்மாக் ஊழல் தொடர்பாக ஒரு முக்கிய புள்ளியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த முக்கிய புள்ளி அமைச்சர் செந்தில் பாலாஜியா.? அல்லது முதல் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினரா.? அல்லது டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரியா.? என்கின்ற விவாதம் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில்.

அதற்குள் இந்த விசாரணைக்கு தடை உத்தரவு பெற்று விட வேண்டும். அதற்காக டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞரிடம் தீவிர ஆலோசனை திமுக தரப்பு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த வழக்கு தொடர்பாக இனி டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடினாலும் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு கொட்டு தான் வைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here