எப்படி தற்பொழுது தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தை குறிவைத்து தற்பொழுது அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறதோ, அதே போன்று கடந்த வருடம், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை, அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சவுத் குருப் என்ற பெயரில் கவிதா, சரத் ரெட்டி, முகுந்தா சீனிவாசலு ரெட்டி ஆகியோர் செயல்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் இருந்து விஜய் நாயர் என்பவர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பாக ரூ. 100 கோடியை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. மேலும் பல்வேறு மதுபான ஆலை அதிபர்களுக்கு சாதகமாக கொள்கை வகுக்கப்பட்டதாகவும், இதற்காக பல கோடி ரூபாய் ஆம் ஆத்மிக்கு லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், தென் மாநிலங்களைச் சேர்ந்த மதுபான ஆலை அதிபர்களை ஒன்றிணைக்கும், ‘சவுத் குரூப்’ ஆம் ஆத்மிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் மேல்சபை உறுப்பினருமான கவிதாவுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்பொழுது அதே பாணியில் தமிழகத்தில், முதல்வர் முக ஸ்டாலின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து தான் டாஸ்மாக் தொடர்பான நிறுவனர்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் கணக்கில் கட்டப்படாமல் ஊழல் நடந்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு ஆதாரங்களை திரட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் அடிப்படையில் சமீபத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் மது பாட்டில்கள் மூன்றில் ஒரு பங்கு அரசு கணக்கில் கட்டப்படாமல் விற்பனை செய்யப்பட்டு அந்த பணம் ஊழல் பணமாக கைமாறி வருவதாகவும்.
அதாவது கடந்து நான்கு வருட திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் டாஸ்மாக் கில் மட்டுமே ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்பொழுது நடந்த அமலாக்க துறை சோதனையில் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த போலி ரசீதுகள் மூலம் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களும், கொள்முதல் செய்யப்படும் மது பாட்டிகளும் அரசு கணக்கில் கொண்டு வரப்படாமல் நடந்த ஊழலுக்கு ஆதாரமாக அமைத்துள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் எப்படி டெல்லி மதுபான ஆலை ஊழலில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்க துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது போன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி கைது செய்யப்படுவாரா.? என பரபரப்பு நீடித்து வரும் நிலையில், டாஸ்மாக் மூலம் நடந்த ஊழலில் உதயநிதிக்கு நேரடியாக தொடர்பு இருந்தால் மட்டுமே அமலாக்க துறை கைது செய்ய முடியும் என்றும்.
அந்த வகையில் இதில் துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் திமுக எம்பி ஜெகத் ரக்சன் போன்றோர் சிக்க வாய்ப்பு இருக்கே தவிர, முதல்வர் குடும்பத்தினர் சிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது, இருந்தாலும் டாஸ்மாக் மூலம் நடந்த ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு சென்று , அங்கிருந்த திரும்ப உதயநிதி அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ள எதாவது ஒரு கம்பெனிக்கு வந்துள்ளதா என்கிற கோணத்திலும் அமலாக்க துறை அதிகாரிகள் தோண்ட ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.