சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டது. மேலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, கைப்பற்றிய ஆவணங்கள் குறித்தும், மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கிருந்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
அதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தப்பிக்க வழியே இன்றி சில விஷயங்களை உளறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த முறை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை 15 நாட்களுக்குள் மட்டுமே கஸ்டடி எடுத்து விசாரிக்க முடியும்.

ஆனால் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆகவே 15 நாட்களுக்கு மேல் ஆகும், அதனால் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடியாது என்றல்லாம் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஜார் செய்யப்பட்டு வெளியே வந்த பின்பும், அவரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டார்கள்.
அந்த வகையில் அமலாக்க துறை அதிகாரிகளின் பிடியிலிருந்து தற்போது டாஸ்மாக் ஊழலில் சிக்கியுள்ள திமுகவின் முதன்மை குடும்பம் தப்பிக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக நடந்து முடிந்த அமலாக்கத்துறை சோதனையில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பல முக்கிய ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர், நான்கு ஜிமெயில் ஐடிகளை பயன்படுத்தி வந்ததாகவும், அதில் ஒரு ஐடியில் இருந்து தொழிலாளர்களை தொடர்பு கொள்வது மற்றொரு ஐடியில் இருந்து அமைச்சர்கள் மற்றும் முதன்மை குடும்பத்தினரை தொடர்பு கொள்வது, மற்றும் ஒரு ஐடியில் இருந்து சப்ளையர்களை தொடர்பு கொள்வது, இப்படி நான்கு ஜிமெயில் ஐடிகளை உயர் அதிகாரி பயன்படுத்தி வந்ததாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ள நிலையில்.
மேலும் அந்த உயர் அதிகாரிகளிடம் இருந்து இரண்டு ஐ ஃபோன்களையும் அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஜெனரல் மேனேஜர் இரண்டு ஜிமெயில் ஐடி பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்து அமலாக்கத் துறையினர், அவரிடமிருந்து ஒரு ஐ போன் மற்றும் ஒரு சாம்சங் போனை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு டாஸ்மாக் அதிகாரியிடம், இரண்டு ஐபேட், ஒரு ஐபோன் போன்றவை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள். மேலும் நான்கு ஹார்ட் டிஸ்க் மற்றும் இரண்டு லேப்டாப்பிற்கான ஹார்ட் டிஸ்க்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து தற்போது சோதனை செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொதுவாகவே whatsapp கால்களை ட்ராக் செய்ய முடியாது என்பதால் பலரும் வாட்ஸ் அப் கால்களில் பேசுவது வழக்கம். ஆனால் டாஸ்மாக் உயர் அதிகாரிக்கும் முதன்மை குடும்பத்திற்கும் இடையில் நடந்த வாட்ஸ் அப் உரையாடல்களை அமலாக்கத்துறை அவர்கள் கைவசம் இருக்கும் தொழில்நுட்ப மூலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்பொழுது இந்த ஊழல் விவகாரம் முதன்மை குடும்பத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தான் முதன்மை குடும்பத்தின் மாப்பிளை சார், தங்கள் குடும்பத்தை காப்பாற்றி கொள்ள சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.