டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனை தற்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. டாஸ்மாக் அலுவலகங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் தான் என்பது முக்கிய காரணம்.
அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் சுமார் 40க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளை காரணம் காட்டி மீண்டும் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனையை தொடர வாய்ப்பு இருக்கிறது என்பதால், லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை முடித்து வைத்து விடலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,

அதனால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் பதியப்பட்டுள்ள சுமார் 40க்கு மேற்பட்ட டாஸ்மாக் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் டாஸ்மாக் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட சுமார் 40க்கு மேற்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டு வாரம் கால கேள்வி கேட்டதற்கு, திட்டவட்டமாக நீதிமன்றம் இதற்கு மறுத்து, ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையால் டாஸ்மாக் தொடர்பான பதியப்பட்ட 40க்கு மேற்பட்ட வழக்குகளின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றம் விதித்த கெடுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறையால் பதியப்பட்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொடர்பான வழக்குகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால், அல்லது ஆதாரங்கள் மறைக்கப்பட்டால் அல்லது வேறு ஏதாவது ஒரு சூழ்ச்சியை தமிழக அரசு செய்தது என்று நீதிமன்றம் கண்டுபிடிக்கப்பட்டால், இந்த வழக்கை அதிரடியாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடுவதற்காக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஏற்கனவே பதியப்பட்ட டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை அவசர அவசரமாக ஏதாவது மாற்றம் கொண்டு வருவதற்கு அல்லது முடித்து வைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் தொடர்புடைய டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகன் தொடர்பான இடங்களில் அதிரடியாக அமலாக்கத்துறை சோதனையை ஒரு பக்கம் மேற்கொண்டு இருக்க,
உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார், இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் நண்பன் ரத்தீசின் வீடு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது, அதே நேரத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகனுக்கும் ரத்தீஸ்க்கும் இடையிலான பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விசாகன் வீட்டு அருகே வாட்ஸ் அப் சேட் செய்யப்பட்டதாக சில ஆவணங்கள் கிழிந்த நிலையில் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது, அந்த whatsapp சேட்டில் ரத்தீஸ்க்கும் மற்றும் விசாகனுக்கும் இடையில் எவ்வளவு டாஸ்மாக்கில் வரவு செலவுகள் நடக்கிறது என்று சேட் செய்யப்பட்ட விவரம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவை அனைத்துமே அமலாக்கத்துறை கைவசம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த விசாரணை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில், ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான விசாகன் உயரதிகாரி விசாகன் இந்த வளையத்தில் சிக்கி இருக்கிறார் மறுப்பக்கம் உதயநிதி நெருங்கிய நண்பராக ரத்தீஷ் வெளிநாடு தப்பி விட்டார், இது அனைத்துமே உதயநிதியை குறி வைத்து தான் அமலாக்க துறை உதயநிதியை நெருக்கி விட்டதாகவும், இறுதியில் திமுக ஆட்சியே முடிவுக்கு கொண்டு வரும் சூழலை இந்த டாஸ்மாக் ஊழல் நிகழ்த்த வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள் .