திமுகவின் முதல் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய விசாகன் – ரதீஷ் – ஆகாஷ் பாஸ்கர் ஆகிய மூவரை குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதில் உச்ச கட்டமாக முதல் குடும்பத்தின் மீது கை வைத்துள்ளது அமலாக்கத்துறை. அதாவது அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள ஆகாஷ் என்பவர் முதல்வர் மு க ஸ்டாலினின் அண்ணன் முக முத்துவின் பேத்தியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.
அதாவது முதல்வருக்கும் பேத்தி முறையான தரணி என்பவரை ஆகாஷ் பாஸ்கர் திருமணம் செய்த அடுத்த ஆறு மாதத்தில் சுமார் 500 கோடி அளவிற்கு சினிமாவில் முதலீடு செய்து படம் எடுக்கும் அளவிற்கு அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது.? மணி லண்டரிங் நடந்து உள்ளதா.? என்கின்ற பார்வையில் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரிடம் சோதனை செய்து வருகிறது .

அதேபோன்று அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் அமலாக்கத்துறை சோதனையில் சிக்காமல் துபாய்க்கு தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய வீடு அமலாக்கத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரத்தீஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்யக் கூடியவர், அந்த வகையில் அவருக்கும் பல கோடி பணம் ரியல் எஸ்டேட்டில் தொழில் முதலீடு செய்வதற்கு எங்கிருந்து வந்தது என்கின்ற ஆதாரமும் அமலாக்கத்துறை கையில் சிக்கியதால் இந்த சோதனையை அமலாக்க துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விசாகணை அமலாக்கத்துறை துருவி துருவி விசாரித்து வருகிறார்கள், இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில், ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், பல கோடி ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்க துறையால் கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் மூலம் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் பணத்தை உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலும், அதே போன்று முதல்வரின் குடும்பத்தில் திருமணம் செய்துள்ள ஆகாஷ் பாஸ்கர் மூலம் சினிமாவிலும் முதல் குடும்பம் முதலீடு செய்துள்ளதா என்கின்ற ஒரு சந்தேகத்தின் பார்வையிலேயே அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் விசாகனிடம் துருவி துருவி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் சொல்லும் பதிலை வைத்து அடுத்ததாக ஆகாஷ் பாஸ்கரை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது. அதே நேரத்தில் துபாய்க்கு தப்பி ஓடி உள்ள ரத்தீசை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் மத்திய உள்துறை மூலம் உதவியை அமலாக்கத்துறை நாட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது ஆகாஷ் பாஸ்கரை அமலாக்கத்துறை தட்டி தூக்கிருப்பது முதல்வர் குடும்பத்தின் மீது கை வைக்க அமலாக்கத்துறை தொடங்கிவிட்டது என்றும், ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் நண்பன் ரத்தீசை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது, அதேபோன்று உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரும் முதல் குடும்பத்தில் திருமணம் செய்துள்ள ஆகாஷ் பாஸ்கரையும் அமலாக்கத்துறை குறி வைத்தது உள்ளதை பார்க்கும் பொழுது , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமலாக்க துறையால் சுற்றி வளைக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.