சமீபத்தில் சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்கள் என்று குறிப்பிட்ட அமித்ஷா, 6 முக்கிய திமுக அமைச்சர்களை பெயரை சொல்லாமல் மறைமுகமாக அவர்கள் சிக்கியுள்ள ஊழல்கள் சுட்டி காட்டி பேசி, அடுத்து நீங்கள் தான் டார்கெட், தயாராக இருங்க என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார் அமித்ஷா.
அப்படி அமித்சா திமுக அமைச்சர்கள் 6 நபரின் பெயரை குறிப்பிடாமல், முதலாவதாக வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தவர் என்று பெயரை சொல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் பேசியது, ஏற்கனவே அமலாக்க துறையால் சிறைக்கு சென்று ஜாமீன் வெளியே வந்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் தொடர்ந்து பேசிய அமித்ஷா, மணி லாண்டரி லாண்டரியில் ஈடுபட்டவர், சட்டவிரோதமாக மணல் கொல்லையில் ஈடுபட்டவர், சுரங்க ஊழலில் ஈடுபட்டவர் என எந்தந்த ஊழலில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்களின் பெயரை குறிப்பிடாமல் இது போன்ற ஊழல்களில் சிக்கியுள்ளார்கள் என மறைமுகமாக ஆறு திமுக அமைச்சர்களை சுட்டி காட்டி இருந்தார் அமித்சா.
இந்த நிலையில் அமித்ஷா தமிழகம் வந்து திமுக தலைவர் ஊழலில் மாஸ்டர் டிகிரி பெற்றவர்கள், அதில் 6 அமைச்சர்களை குறிப்பிட்டு பேசி இருந்த நிலையில், இதில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமித்சா குறிப்பிட்ட 6 அமைச்சர்களில் முதலில் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து தற்பொழுது அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அமித்ஷா பேசி இருந்த 6 அமைச்சர்களில், முதலாவதாக தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், அமித்ஷா குறிப்பிட்ட மற்ற 5 திமுக அமைச்சர்களில் யாரை டார்கெட் செய்து அமலாக்க துறை சோதனை மேற்கொள்ள இருக்கிறது என்கிற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் மற்றொரு வழக்கு செந்தில் பாலாஜி மீது பதியப்பட்டு தட்டி தூக்க தான் அமலாக்கத்துறை தற்பொழுது, செந்தில்பாலாஜியை குறிவைத்து டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என அமலாக்க துறை உள்ளே வந்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வந்த நிலையில் , தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி மீது மற்றொரு வழக்கை பதிவு அமலாக்க துறையினரால் பதிவு செய்ய இருப்பது, வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திமுகவின் கஜானா என்று அழைக்கப்படும் செந்தில் பாலாஜி 2026 சட்டசபை தேர்தலில் போது சிறையில் அடைக்கப்பட்டால், குறிப்பாக செந்தில் பாலாஜி கட்டுக்குள் இருக்கும் கொங்கு மண்டலத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக மிக பெரிய இழப்பை சந்திக்கும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.