சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்பு, எடப்பாடி அணியினருக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுக தற்பொழுது இரண்டு அணிகளாக எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணி என பிரிந்து கிடக்கின்றது. இதில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் உள்ளையே இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள், அதில் ஒரு பிரிவினர் பாஜகவுக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவினர் பாஜகவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள்.இதில் பெரும்பாலும் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரு பிரிவினரின் கருத்துக்கே எடப்பாடி பழனிச்சாமி முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும் எடப்பாடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அதிக இடங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அந்த வகையில் கடந்த தேர்தலில் போது கடைசி வரம் எடப்பாடியை நம்பி மோசம் போனது போன்று இம்முறை நடந்து விட கூடாது, அதனால் பாஜக தலைமையில் தேர்தலை சந்திக்க தயாராகவிட்டது பாஜக.
இந்த நிலையில் எடப்பாடி அணியில் இருக்கக்கூடிய பாஜகவுக்கு எதிரானவர்கள், எடப்பாடியிடம், பாஜகவுக்கு தமிழகத்தில் என்ன செல்வாக்கு இருக்கிறது.? நம்மளுடைய ஆதரவில் தான் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வெற்றி பெற்றார்கள். அதனால் அவர்கள் என்ன கூட்டணியில் இருந்து விலகுவது, நாம் கூட்டணியில் கழட்டி விடுவோம், அப்போதுதான் நீங்கள் தனி தன்மையுடன் ஒரு தலைவனாக உருவாக முடியும் என்று எடப்பாடியை உசுப்பேத்தி விட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து எடப்பாடி அணியில் இருக்கும் சி.வி சண்முகம் போன்றோர்கள் மூலம் பாஜகவுக்கு எதிராக மிகக் கடுமையாக எடப்பாடி பேச வைத்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு பின்பு பாஜக மற்றும் எடப்பாடி அணியினருக்கான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. இதனால் பாஜக மற்றும் ஓபிஎஸ் உறவு மேலும் வலுவடைந்து, பாஜக ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கின்றது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதனால் எடப்பாடி அணியில் இருக்கக்கூடிய பாஜக ஆதரவாளர் தற்பொழுது எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும், மேலும் ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஒருவர் அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் பாஜகவில் இணை இருப்பதாகவும் தகவல் வருகிறது. இதேபோன்று அடுத்தடுத்து எடப்பாடி அணியில் இருக்கும் முக்கிய தலைகள் பாஜகவை நோக்கி நகர்வார்கள், அல்லது பாஜக பக்கம் இருக்கும் ஓபிஎஸ்யை நோக்கி நகருவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடிக்கு தகவல் சென்றுள்ளது.
இந்நிலையில் அவசரப்பட்டு பாஜகவை எதிர்த்து விட்டோம் என்று கண் கட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல் தற்பொழுது வருத்தத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய அணியில் இருக்க கூடிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மூலம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என்று தற்பொழுது பேச வைத்த அந்தர் பல்டி அடித்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் பரிதாபத்தில் இருக்கும் எடப்பாடி மீது பாஜக கருணை காட்டுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.