அமலாக்க துறையில் செந்தில் பாலாஜி ஒரு பக்கம் சிக்கியுள்ள நிலையில், மமறுபக்கம் செந்தில் பாலாஜி பிடியில் சிக்கியுள்ளது திமுகவின் முதன்மை குடும்பம். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் உள்ள 50 சதவிகித பார் கரூர் கம்பெனி என்று சொல்ல கூடிய செந்தில் பாலாஜி கட்டுக்குள் வந்தது. அதாவது தமிழகத்தில் இயங்கி வரும் பார்களில் சுமார் 50 சதவிகிதம் செந்தில் பாலாஜி நேரடியாக எடுத்து நடத்தி வருவதாகவும்.
இந்த பார்கள் கணக்குகளை அனைத்தும் செந்தில்பாலாஜி தம்பி அசோக் தான் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் சுமார் 1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கணக்கில் கட்டப்படாத மது பாட்டில்கள் , கரூர் கம்பெனி நேரடியாக நடந்தும் பார்கள் மூலமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், இதில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதில் அரசுக்கு கணக்கில் கட்டப்படாமல் விற்கப்படும் மதுபாட்டிகள் மூலம் வரும் வருமானம் கரூர் கம்பெனி மூலம் வசூல் செய்யும் செந்தில் பாலாஜி,
மாதம் மாதம் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு பெரும் தொகையை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது மற்ற மொத்த அமைச்சர்கள் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு மாதம் மாதம் கொடுக்கும் பணத்தை விட செந்தில் பாலாஜி ஒருவர் கொடுக்கும் பணம் பல மடங்கு அதிகம் என்பதால், முதன்மை குடும்பத்தின் செல்ல பிள்ளையாகவே மாறியுள்ளார் செந்தில் பாலாஜி.
இந்த நிலையில், அமலாக்க பிடியில் பல திமுக அமைச்சர்கள் சிக்கி இருந்தாலும் கூட, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது, திமுக முதன்மை குடும்ப உறுப்பினர்கள் பதறி அடித்து கொண்டு, செந்தில் பாலாஜியை நேரில் சென்று சந்தித்ததில் பிண்ணனியில், எங்களை போட்டு கொடுத்து விடாதே என்று செந்தில் பாலாஜியிடம் தெரிவிக்க தான் என்றும்,
அதே நேரத்தில் செந்தில்பாலாஜி அமலாக்க துறை பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாதபடி ஆதாரங்கள் அமலாக்க துறையில் கையில் சிக்கியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி ஊழல் பணத்தை யாரிடம் கொடுத்தார் என்கிற உண்மையை வாங்கி விட்டால், திமுகவின் முதன்மை குடும்பத்தை தட்டி தூக்கி விடலாம் என மிக தீவிரமாக இருக்கிறது அமலாக்க துறை.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த முறை கைது செய்யப்பட்ட போதே, அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால் முதன்மை குடும்பத்தை அமலாக்க துறையிடம் போட்டு கொடுத்து விடுவார் என்கிற பயத்தில் தான், இலாக்கா இல்லாத அமைச்சர், அதன் பின்பு ஜாமீனில் வெளிவந்த பின்பு மீண்டும் அதே துறை அமைச்சர் வழங்கி செந்தில் பாலாஜி மனதை குளிர வைத்தது திமுகவின் முதன்மை குடும்பம்.
இந்த நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜி முதன்மை குடும்பத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதாவது என்னை மீண்டும் சிறை செல்லாமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு, அதையும் மீறி நான் சிறை செல்ல நேரிட்டால் உங்களை போட்டு கொடுத்து விட்டு நான் தப்பித்து விடுவேன் என செந்தில் பாலாஜி முதன்மை குடும்பத்தினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதால் கடும் பீதியில் முதன்மை குடும்பம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.