சுமார் மூன்று நாட்களாக தமிழகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை முடிவில் திமுக ஆட்சிக்கு சங்கு ஊதும் வகையில் பல்வேறு ஆதாரங்கள் அமலாக்கத்துறை கையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மதுபான ஊழல் தொடர்பாக எப்படி சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்றாலும், தற்பொழுது வரை விடாமல் அந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் டெல்லியில் முன்னால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஆட்சியையும் இழந்தது மட்டுமில்லாமல், கட்சியும் போச்சு. இதே போன்ற ஒரு நிலை தான் தமிழகத்தில் திமுகவிற்கு ஏற்படும் சூழல், தற்பொழுது நடந்துள்ள அமலாக்கத்துறை சோதனை மூலம் அரங்கேற இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்பாக இந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக தரப்பில் எதுவுமே வாயே திறக்கவில்லை. காரணம் இதற்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்த போது, முதல்வர் மு க ஸ்டாலின் எங்களை தொட்டுப்பார் சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வீடியோவெல்லாம் வெளியிட்டார். ஆனால் இப்படி முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய வீடியோ அமலாக்கத்துறையை சீண்டியது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வராதபடி வழக்கை துரிதப்படுத்தியது அமலாக்கத்துறை. ஒரு வழியாக ஒரு வருடம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி. அதே போன்ற ஒரு நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், திமுக தரப்பிலிருந்து சமீபத்தில் நடந்த மதுபான ஆலை குறித்த சோதனை குறித்து மூச்சு விட வில்லை என கூறப்படுகிறது.
மதுபான ஆலைகளில் இருந்து அரசு கணக்கில் காட்டப்படாமல் நேரடியாகவே மது கடைகளுக்கு மது பாட்டில்கள் அனுப்பப்பட்டதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மாதத்திற்கு சுமார் 50 லட்சம் பாட்டில்கள் கடைகளுக்கு அனுப்பப்படுவதாக கணக்கு காட்டப்பட்டிருக்கும் நிலையில், ஆனால் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் மாதத்திற்கு பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 50 லட்சம் கணக்கு காட்டப்படுகிறது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்ததுள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய அளவில் மணி லாண்டரி நடந்துள்ளதாக கண்டுபிடித்த அமலாக்கத்துறை, மேலும் துருவித் துருவி தன்னுடைய விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் மதுபான ஆலையின் உற்பத்தியை ஒப்பிடும் பொழுது, அதன் மதுபான ஆலையில் இருந்து வெளியாகும் பாட்டில்கள் மிகக் குறைந்த அளவே இருப்பதை கண்டுபிடித்துள்ள அமலாக்கத்துறை.
இது மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதை ஆதாரத்துடன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த நான்கு வருடத்தில் இது சுமார் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும். அந்த வகையில் மிகு விரைவில் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்க இருக்க இருக்கிறது அமலாக்க துறை.
அந்த வகையில் சத்தீஸ்கர் மற்றும் டெல்லி போன்று திமுக ஆட்சிக்கு ஆபத்து வரலாம், எப்படி டெல்லியில் மதுபான ஊழல் மூலம் ஆம் ஆத்மி கட்சி இருந்த இடம் தெரியாமல் அழிந்ததோ, அதேபோன்று தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடும், இந்த டாஸ்மாக் ஊழல் மூலம் திமுக கட்சியே காணாமல் போகலாம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்