டாஸ்மாக் மெகா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அடுத்தடுத்த நடவடிக்கைகளால், இதில் தொடர்புடைய முக்கிய புள்ளியை அமலாக்கத்துறை நெருங்கி விட்டது என்று கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் அவருடைய பினாமி என்று சொல்லக்கூடிய ரத்தீஷ் அமலாக்கத்துறை தன்னை சுற்றி வளைத்து விட்டது என்கின்ற தகவல் அறிந்து வெளிநாடு தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் நேரடியாக அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு இருக்கலாம் ரத்தீஷ் , ஆனால் அவர் தப்பி சென்றதன் மூலமே தான் குற்றம் இழைத்தவர் என்பதை அவரே ஒப்பு கொண்டது போன்று அமைந்துவிட்டது. இந்த நிலையில் வெளிநாடு தப்பி சென்றுள்ளார் ரத்தீஷ் இந்த டாஸ்மாக் ஊழல் மூலம் வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அவர் தான் கையாண்டு உள்ளார் என்பதை அமலாக்கத்துறை உறுதி படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரத்தீஷ் சிக்கிவிட்டால் இதன் பின்னணியில் உள்ள அந்த முக்கிய புள்ளியை தட்டி தூக்கி விடும் அமலாக்கத்துறை. இந்த நிலையில் ரத்தீசை இன்டர்போல் உதவியுடன் இந்தியா கொண்டு வருவதற்கான திட்டமும் அமலாக துறையை கையில் இருப்பதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள்.
அப்படி கஸ்டடியில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகி உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள், அதே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விட்டால் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து வெளிவருவதிலும் மிகப்பெரிய சிக்கல் சட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் மெகா ஊழல் தொடர்பாக விசாரணைக்கு சம்மன் அனுப்பி ஒவ்வொரு டாஸ்மாக் உயர் அதிகாரிகளும் அமலாக்கத்துறை கேட்கின்ற கேள்விக்கு முழு ஒத்துழைப்புடன் பதிலை தெரிவித்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கையில் பல ஆதாரங்களை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அதிகாரிகள் தெரிவிக்கும் பதில்கள், குறிப்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது ரத்தீஷ் சொல்வதைத் தான் நாங்கள் செய்தோம் என்று ரத்தீசை மாட்டி விட்டு விட்டார்கள் டாஸ்மாக் அதிகாரிகள் என கூறப்படுகிறது.
இப்படி டாஸ்மாக் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையை அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீசை ஆதாரத்துடன் பிடித்து விட்ட நிலையில் , மறுபக்கம் ரத்தீசின் நண்பரான விக்ரம் ஜு என்பவரும் இந்த அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.
சினிமா துறையில் மிக பெரிய அளவில் தொடர்பு வைத்து இருக்கும் விக்ரம் ஜுஜூ அவர் கைவசம் இருக்கும் மொத்த வாட்ச் கலெக்ஷன்களின் விலை மதிப்பு மட்டுமே சுமார் அமெரிக்கன் டாலர் 25 மில்லியன் என்று கூறப்படுகிறது, இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் விக்ரம் ஜுஜூ கைவசம் இருக்கும் வாட்சுகளின் மதிப்பு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக்கின் ஊழல் பணம் உதயநிதி ஸ்டாலினின் நண்பர்களான விக்ரம் ஜுஜூ, ரத்தீஷ் ஆகியோர் பல கோடி மதிப்பில் வாட்ச் வாங்குவதற்கும் சொகுசு பங்களா கட்டுவதற்கும் மற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என கூறபடுகிறது. மேலும் விக்ரம் ஜூ ஜூ போன்ற உதயநிதி நண்பர்கள் ஆடம்பர வழக்கையே உதயநிதியை மாட்டி விடும் வகையில் அமைத்துள்ளது . அடுத்தடுத்து வரும் நாட்களில் ரத்தீஷ், விக்ரம் ஜூ ஜூ வை தொடர்ந்து இறுதியில் உதயநிதியை நோக்கியே இந்த விசாரணை திரும்பும் என்று கூறப்படுகிறது.