கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக தற்பொழுது டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தின் தலைமை அதிகாரி விசாகனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு சுமார் இரண்டு நாட்கள் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர் அமலாக்க துறை அதிகாரிகள்.
அவரை தொடர்ந்து டாஸ்மார்க் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குனர் ஜோதி சங்கருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாமான் அனுப்பி விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள். இந்த அதிரடி சோதனைக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ரத்தீஷ்யிடம் டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொள்வதற்கு முன்பே அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தமிழ்நாட்டில் நடக்கும் சோதனைகள் குறித்து கேட்டறிந்ததாக டெல்லியில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி அளவில் இந்தியா முழுவதும் உள்ள ஏஜென்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ரிப்போர்ட்களை சமர்ப்பித்து ஆலோசனையில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் மே 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அமலாக்க துறையைச் சார்ந்த மூத்த அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்கள். அப்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையும் மற்றும் டாஸ்மாக் தலைமை அதிகாரி விசாகனிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அமலாக்கத்துறை அதிகாரியிடம் கேட்டு தெரிந்திருக்கிறார்.
குறிப்பாக விசாகன் – ஆகாஷ் பாஸ்கர் – ரத்தீஷ் – கார்த்திக் – செந்தில் இந்த ஐந்து நபர்களுக்கும் முதல் குடும்பத்துக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்து பல தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து கேட்டு தெரிந்திருக்கிறார் அமித்ஷா. மேலும் டாஸ்மாக் உயிர் அதிகாரி விசாகனிடம் நடத்திய விசாரணையில் விசாகன் என்னென்ன பதில்களை தெரிவித்தார் என்பது குறித்தும் முழுமையாக அமித்ஷா அமலாக்கத்துறை அதிகாரியிடம் கேட்டு தெரிந்து இருக்கிறார்.
குறிப்பாக இவர்களிடம் இருந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் முதல் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை நோக்கி தான் இந்த சோதனை முடியும் தருவாயில் உள்ளது என்கின்ற தகவலையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
மேலும் பல ஆயிரம் கோடிகளை சினிமாவில் முதலீடு செய்து அதன் மூலம் வரும் பணம் முதல் குடும்பத்திற்குத் தான் செல்கிறது என்கிற ஆதாரத்துடன் ரிப்போர்ட்டை அமித்ஷாவிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்த நிலையில் கிட்டத்தட்ட டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் முதலில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அதில் ஆயிரம் கோடி ஊழல் நடந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் அதனை தொடர்ந்து இந்த ஊழல் பணம் எங்கே சென்றிருக்கிறது? எப்படி மண்ணிலாண்டரிலங் நடந்துள்ளது என்பதை நோக்கி நடந்த விசாரணையில் ரத்தீஷ் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலிலும், ஆகாஷ் பாஸ்கர் மூலம் சினிமாவிலும் மண்ணிலாண்டரிங் நடந்து முதல் குடும்பத்தை நோக்கி சென்றிருக்கிறது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து விட்டதாகவும், இது குறித்த முழு ரிப்போர்ட் அமித்ஷா கையில் இருப்பதால், விரைவில் முதல் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி விசாரணையை மேற்கொள்ளும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.