கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை அதிரடி சோதனையின் தொடர்ச்சியை தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது, சுமார் 300 கோடி அளவில் மாதம் பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் வாங்குவதின் மூலமாகவே முறைகேடு நடந்துள்ளதாக ஒரு பக்கம் அமலாக்க துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மாதம் டாஸ்மாக் மூலம் 50 சதவீத லாபம் அரசாங்க கணக்கில் வரவில்லை என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மாதம் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதில் சுமார் 40,000 கோடி ரூபாய் பாட்டில் அரசாங்கத்திற்கு தெரியாமல் கணக்கில் காட்டப்படாமல் விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்காகவே பல AC பார்களும் மனமகிழ் மன்றம் என்கின்ற பெயரில் மதுபான பார் களும் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மனமகிழ் மன்றம் போன்ற பார்களில் சுமார் 80 சதவீதம் பாட்டில்கள் அரசாங்க கணக்கில் வராதவை என்று அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே டாஸ்மாக் மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கின்ற நிலையில், சுமார் 3000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த 3000 கோடி ரூபாய் பணத்தை எப்படி.? யார் மூலம் மணி லண்டரிங் நடந்துள்ளது என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தோண்டி எடுத்து வருகிறார்கள், அதில் மூவர் பெயர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் தொழில் அதிபர் அணில் ஜெயம், அபினேஷ் மற்றும் ரத்தீஷ் ஆகிய மூவர் தான் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வேளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் அணில் ஜெயம் மூலமாகவே பல கோடி ரூபாய் மணி லாண்டரி நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக தொழிலதிபர் அணில் ஜெயம் என்பவர் சுமார் ஆயிரம் வாடகை வாகனங்களை வைத்துள்ளதாகவும், அதாவது இவர் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் வாடகை வாகனங்கள் மின்சாரத்தில் ஓடுவது என்றும் பெட்ரோல் டீசலில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பல கோடி ரூபாய் இந்த வாடகை வாகனம் மூலமாகவே லாபம் ஈட்டியதாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி அணில் ஜெயம், அபினேஷ் மற்றும் ரத்தீஷ் இவர்கள் மூவர் மூலமாகவே இந்த 3000 கோடி ரூபாய் பணம் மணி லாண்டரி நடந்து கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மூளையாக செயல்பட்டது உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரத்தீஷ் டாஸ்மாக்கின் உயர் அதிகாரி விசாகனுடன் நடந்த சாட் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் விசாகன் மட்டுமல்லாமல் பல அதிகாரிகளிடம் ரத்தீஸ் தான் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும். மேலும் டாஸ்மாக் தொடர்பான வியாபார கணக்கு ரிப்போர்ட் அனைத்துமே ரத்தீசின் மேற்பார்வையிலே நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் பல ஆயிரம் கோடி ஊழல் பணம் ரத்தீஸ் மூலமாகவே மணி லண்டரிங் நடந்து முதல் குடும்பத்திற்கு சென்றதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் குரலாகவே அதிகாரிகளிடம் ரத்தீஷ் பேசி வந்ததும், மேலும் வெளிநாடுகளில் ரத்தீஷ் மூலம் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், ரத்தீஷை பிடித்து விட்டால் முதல் குடும்பத்தை தட்டி தூக்கி விடலாம் என்று அமலாக்கத்துறை ரத்தீஷை நெருங்கி வந்த நிலையில் , உடனே லண்டன் தப்பி சென்று விட்டார் ரத்தீஷ்.