செந்தில் பாலாஜியின் பினாமி என்று அறியப்படும் கொங்கு மெஸ் உரிமையாளர் உட்பட இருவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருவ வகையில், ஒப்பந்தகாரர் சங்கருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். செந்தில் பாலாஜி அங்கம் வகிக்கும் மின்சாரத்துறை மற்றும் டாஸ்மாக் இந்த இரண்டையும் குறி வைத்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது எந்த நோக்கத்திற்காக அமலாக்கத்துறை டாஸ்மாக் சம்பந்தமான இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்களோ, அதே விஷயத்தை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது பேசி இருப்பார். டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பாட்டிலுக்கு பில் போட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் PTR.

அதாவது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பாட்டில்கள் முழுமையான கணக்கு வரப்படவில்லை என்பதை முன்பே நிதி அமைச்சராக பி டி ஆர் தியாகராஜன் மறைமுகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவல் அடிப்படையிலேயே தற்பொழுது அமலாக்கத்துறை டாஸ்மாக் மூலம் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள.
ஏற்கனவே டாஸ்மாக் தொடர்பான பிரச்சனை வெடித்த போது மார்ச் மாதம் தொடங்கி கியூ ஆர் கோடு மூலம் விற்பனை செய்யப்படும் என்றெல்லாம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமுறை இன்னும் வரவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் தொடர்பான அமலக்கத்துறை சோதனை தொடர்ந்து, மின்சார துறையில் நடந்த ஊழல் தொடர்பான ஆதாரங்கள் அமலாக்கத்துறை கையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மாலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படும், அந்த வகையில் மின்சாரம் வெளியே இருந்து வாங்கப்படுகிறது, இதில் சுமார் 2000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் டிரான்ஸ்பார்மர் வாங்குவதில் டெண்டர் விடப்பட்டதில் சுமார் 33 நிறுவனங்கள் ஒரே விலையை பிக்ஸ் செய்து டெண்டர் கேட்டிருந்த நிலையில், இந்த 33 நிறுவனங்களுக்கும் பிரித்து டெண்டர் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 33 நிறுவனமும் எப்படி ஒரே விலையை நிர்ணயம் செய்யும் என்கின்ற சந்தேகம் வலுத்து உள்ள நிலையில், இந்த டிரான்ஸ்பார்மர் வாங்குவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் செந்தில் பாலாஜி ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சிக்கி சிறை சென்று வந்த நிலையில், தற்போது அவர் வகித்து வரும் டாஸ்மாக் மற்றும் மின்சார துறையிலும் ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை கையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே அமலாக்கத்துறை யாரோ ஒருவர் கொடுக்கும் புகாரின் அடிப்படையிலேயே, ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தி வெளியிடும் என்ற அடிப்படையிலேயே சோதனைக்கு வர மாட்டார்கள். சோதனைக்கு வருவதற்கு முன்பு பல ஆதாரங்களை கையில் வைத்து தான் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் திரட்டி ஆதாரங்கள் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை தற்பொழுது செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களிலும் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை தொடர்பான இடங்களிலும் சோதனையை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் இந்த சோதனையில் தோண்ட தோண்ட வரும் பூதம் போல் பல முக்கிய ஆவணங்கள் இந்த சோதனையில் அமலாக்கத்துறை கையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.