முதல்வர் வீட்டுக்கு குறி… உதயநிதியை சுற்றி வளைக்கும் அமலாக்க துறை…

0
Follow on Google News

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான உற்பத்தி ஆலையின் அலுவலகங்களை குறிவைத்து தற்பொழுது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது, அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து தான் நடத்தப்படுகிறது என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அமலாக்க துறையின் குறி துணை முதலமைச்சர் உதயநிதி தான் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் ஆதாரங்களுடன் அதிரடியாக உதயநிதி ஸ்டாலினை லாக் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக நடத்தி வருகிறது அமலாக்கத்துறை என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த போது, அதற்கு முந்தைய ஐந்து வருட சொத்து கணக்கில் சுமார் 2.3 கோடி என்று கணக்கு காட்டப்பட்டிருந்தது.

மு க ஸ்டாலின் தற்பொழுது குடியிருக்கும் சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீடு அப்போது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு தற்பொழுது மு க ஸ்டாலின் குடியிருக்கும் சித்தரஞ்ச சாலை வீடு சுமார் 14.5 கோடி ரூபாய்க்கு முக ஸ்டாலின் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடு வாங்குவதற்கு எப்படி பணம் வந்தது என்றால்,

உதயநிதி ஸ்டாலினும் சொந்தமான ஸ்னோ ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்கின்ற நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் துர்கா ஸ்டாலின் பார்ட்னராக உள்ளார். இந்த நிலையில் உதயநிதிக்கு சொந்தமான அந்த நிறுவனத்தின் மூலமாக சித்தரஞ்சன் சாலையில் மு க ஸ்டாலின் வீடு வாங்குவதற்காக 10.5 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனாக கொடுத்ததாக, கடந்த 2021 தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது அந்த ஸ்னோ ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியிலிருந்து உதயநிதி ஸ்டாலின் வெளியாகி அதற்கு பதில் கிருத்திகா உதயநிதி அந்த நிறுவனத்தை நிறுவகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சித்தரஞ்சன் சாலையில் வீடு வாங்குவதற்காக உதயநிதி ஸ்டாலின் சொந்தமான நிறுவனத்திலிருந்து 10.5 கோடி வட்டி இல்லா கடன் சென்றதை அமலாக்க துறையினர் நோண்ட ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உதயநிதியை பழைய பஞ்சாயத்தான அவர் வெளிநாட்டிலிருந்து உயர்ரக ஹம்மர் கார் வாங்கிய விவாதத்தையும் தற்போது அமலாக்கத்துறை நோண்ட ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கேரளாவை சேர்ந்த ஒரு கார் டீலர்,

யாருக்கெல்லாம் அந்த காரை முறைகேடாக விற்பனை செய்தார் என்பதில், அதில் ஒரு கார் உதயநிதி ஸ்டாலினிடம் விற்பனை செய்ததாக, அந்த கேரளாவை சேர்ந்த கார் டீலர் வாக்கு மூலம் கொடுத்ததாக கூறப்டுகிறது. இப்படி உதயநிதி பழைய பிரச்சனைகளையும் அமலாக்கத்துறை நோண்டி எடுத்து வரும் நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ரெட் ஜெயின் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

அதற்கு அதற்குப் பின்பு ரெட் ஜெயின் மூலம் நடந்த பண பரிவர்த்தனைகளையும் நோண்ட ஆரம்பித்துள்ளனர் அமலாக துறையினர். மேலும் சமீபத்தில் டெல்லி தேர்தல் வரை அமலாக்க துறையினரை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொன்ன மத்திய பாஜக அரசு, தற்போது தமிழகத்தை குறிவைத்து அதிரடியாக களம் இறங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே அமலாக்கத்துறை வலையில் செந்தில் பாலாஜி, எம் ஆர் கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட 12 அமைச்சர்கள் அமலாக்க துறை வலையில் சிக்கி உள்ள நிலையில், தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை குறிவைக்க தொடங்கிய அமலாக்கத்துறை, தற்பொழுது டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் உதயநிதிக்கு தொடர்பு இருக்கா என வலுவான ஆதாரத்தை தேடும் அமலாக்க துறை, மேலும் பழைய விஷயங்களையும் தோண்டி எடுத்து உதயநிதி ஸ்டாலினை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ள அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here