கடந்த 2023 ஆம் வருடம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக தற்பொழுது அதே இடத்தில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது, அமலாக்கத்துறை தற்பொழுது செந்தில் பாலாஜியை குறிவைத்து சோதனை நடத்துவதற்கு பின்னணி காரணம் என்ன என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது, கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பிலிருந்து செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறாரா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி மார்ச் 4 தேதி வழக்கை ஒத்தி வைத்தது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக மார்ச் 4-ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் இந்த பரபரப்புக்கு மத்தியில் மார்ச் 7ஆம் தேதி அதிரடியாக களத்தில் இறங்கிய அமலாக்க துறையினர், செந்தில் பாலாஜி பினாமி என்று அறியப்படும் கொங்கு மெஸ் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஒருவர் மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வந்தனர்.
அதாவது செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மேலும் அதிரடி சோதனையின் மூலம் பல ஆதாரங்களை திரட்டி செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்த விதத்திலும் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே, தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி பணம் கணக்கில் காட்டப்படாததால், மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அமலாக்கத்துறையினர் மணல் குவாரிகளை குறிவைத்து சோதனைகளை மேற்கொண்டனர், அதே பாணியில் தற்பொழுது டாஸ்மாக் கொள்முதலில் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வரவில்லை என்றும் இதனால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என,
தற்போது டாஸ்மாக்கை குறிவைத்து அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர், செந்தில் பாலாஜிக்கு கடந்த 10 நாளைக்கு முன்பு அமித்ஷா தமிழகம் வந்த போதே நாள் குறித்து விட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 26 கோவை வந்த அமித்ஷா , தமிழக அரசியல் குறித்து ஆலோசித்து இருக்கிறார், குறிப்பாக செந்திபாலாஜி குறித்து பேச்சும் நடந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அடுத்த இரண்டு தினங்களில் மீண்டும் அமைச்சராகி, தற்பொழுது அமலாக்க துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, அது மட்டுமில்லாமல் செந்தில் பாலாஜி தொடர்ந்து வெளியில் இருந்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் கொங்கு பகுதியில் பணம் கொடுத்தே திமுகவை வெற்றி அடைய செய்து விடுவார், அந்த அளவுக்கு பணத்தை அடிச்சு குவித்து வைத்துள்ளார் என அமித்சா உடன் நடந்த ஆலோசனையில் பேசப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து தான் அப்போதே செந்தில் பாலாஜிக்கு நாள் குறித்து அமித்சா டெல்லி சென்றது செந்தில் பாலாஜி விவகாரத்தை மீண்டும் தூசி தட்டுங்க என அமலாக்க துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் அமித்ஷா, இதனை தொடர்ந்து தற்பொழுது நடந்து வரும் அமலாக்க துறை சோதனையில் சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.