டாஸ்மாக் மெகா ஊழல் தமிழகத்தை உலுக்கி உள்ள நிலையில், டாஸ்மாக் மூலம் வந்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரத்தீஷ் மூலமாகவே மணி லாண்டரிங் நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதனை தொடர்ந்து ரத்தீஷ் தப்பி வெளிநாடு ஓடியுள்ளார், இந்நிலையில் டாஸ்மாக் மெகா ஊழல் தொடர்பாக அமலாக்க துறையின் அடுத்தடுத்த நகர்வுகள் முதல் குடும்பத்தை நோக்கியே சென்று கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி ஒரு சூழலில் வரும் 24ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. காரணம் எப்படி இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவருடைய மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய போது தன் மகளைக் காப்பாற்ற டெல்லி சென்றாரோ, அதேபோன்றுதான் தற்பொழுது டாஸ்மாக் ஊழலில் தன்னுடைய மகனை அமலாக்கத்துறை சுற்றி வளைத்து வருவதாக வெளியாகும் தகவலின் அடிப்படையில், தன்னுடைய மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காப்பாற்றுவதற்காக தான் முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி செல்கிறார் என்று தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த நான்கு நாட்களாக டாஸ்மாக் மெகா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எப்போதுமே பாஜகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த திமுக பேச்சாளர்கள் தற்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அந்த அளவுக்கு திமுகவினருக்கு யாரும் இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பாஜகவை விமர்சனம் செய்து மேலும் அவர்களின் கோபத்திற்கு திமுகவை உள்ளாக்கி விட வேண்டாம் என்று திமுக தலைமையிடமிருந்து மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய மகனை காப்பாற்ற பாஜகவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட தான் இம்முறை டெல்லி செல்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து டெல்லியில் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, டாஸ்மாக் தலைமை அதிகாரி விசாகனிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைக்கு பின்பு பல ஆதாரங்களை அமித்ஷா கவனத்திற்கு சென்றுள்ளதாகவும்,
இதில் முதல் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் வலுவாக சிக்கியுள்ளதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். இதற்கு அமித்ஷா வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் கண்டிப்பாக இந்த டாஸ்மாக் ஊழலில் மையப் புள்ளியான முதல் குடும்பத்தைச் சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட வேண்டும், அதற்கான வேலைகளை மிகத் தீவிரமாக எடுத்து செல்லுங்கள் என்று அமலாக்கத்துறைக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்திய ஆக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும், அதற்காகவே இந்த டாஸ்மாக் மெகா ஊழலை மிக தீவிரப்படுத்துவதாகவும் கூறப்படும் நிலையில், வெள்ளைக்கொடி ஏந்தி சமரச பேச்சுவார்த்தையில் முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி சென்றாலும் அதற்கான எந்த பயனும் கிடைக்காது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
மேலும் இந்த டாஸ்மார்க் ஊழலில் தொடர்புடைய ஆகாஷ் பாஸ்கர் – ரத்தீஷ் ஆகியோர் தப்பி ஓடியுள்ள நிலையில், அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையிலும் அமலாக்கத்துறை இறங்கியுள்ளதாகவும், அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவலும் அமலாக்க துறைக்கு தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது .