டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் நடந்து வரும் அமலாக்க துறை அதிரடி சோதனையில் மொத்த திமுக கூடாரமும் ஆட்டம் கண்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு 60 சதவீதத்திற்கு அதிகமான மது பாட்டில்களை சப்ளை செய்து வருவதில் மூன்று முக்கிய மதுபான ஆலையில் இருந்து தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்வாட் டிஸ்லரி, எஸ் என் ஜெய முருகனின் SNJ என்னும் நிறுவனம் மற்றும் KALS என்னும் இந்த மூன்று நிறுவனர்களில் இருந்து தான் டாஸ்மாக் நிறுவனம் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட இந்த மூன்று மது ஆலையும் திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள மது ஆலை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இந்த மூன்று நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் வேளையில், இந்த மூன்று நிறுவனத்திடம் இருந்து மது பாட்டில்களை கொள்முதல் செய்யும், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் அலுவலகத்திலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் , பல முக்கிய ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மூன்று முக்கிய மது ஆலையில் இருந்து கொள்முதல் செய்யப்படும் டாஸ்மாக் பாட்டில்களில், பெரும்பாலும், அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் கணக்கில் கொண்டு வராமல், தனியாக அரசு ஸ்டிக்கரை ஒட்டி மது கடைகளுக்கு சப்ளை செய்து மது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் அப்படி விற்கப்படும் மதுவின் வருமானம் அரசுக்கு வராமல் மிக பெரிய இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.
அதாவது தற்பொழுது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்வாட் டிஸ்லரி, எஸ் என் ஜெய முருகனின் SNJ என்னும் நிறுவனம் மற்றும் KALS போன்ற மூன்று நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மது பாட்டில்களில், 50 சதவிகிதம், மது பாட்டில்கள் மட்டுமே அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுவதாக கணக்கு காட்டப்பட்டு.
மீதம் 50 சதவிகிதம் மது பாட்டில்களில் டாஸ்மார்க் பாட்டில்கள் போல ஸ்டிக்கர் ஒட்டி நேரடியாக டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது. உதாரணத்திற்கு மது நிறுவனத்திடம் இருந்து ஒரு மது பாட்டிலை 30 ரூபாய்க்கு டாஸ்மாக் நிறுவனம் வாங்கி, அதை 130 ரூபாய்க்கு விற்பனை செய்வதினால், அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஒரு மது பாட்டில் மூலம் 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது
அதே பாட்டிலை 30 ரூபாய்க்கு அந்த மது தயாரிப்பு நிறுவனத்தில் இடம் இருந்து வாங்கி டாஸ்மார்க் டேட்டா பேஸில் ஏற்றாமல் டாஸ்மார்க் கடைகளில் வைத்து 130 ரூபாய்க்கு விற்கும் கிடைக்கும் 100 ரூபாய் லாபம் அரசாங்கத்திற்கு போகாது. இது டாஸ்மார்க் கடைகளுக்கு மது பாட்டில்களை அனுப்பும் டாஸ்மாக் அலுவலகத்திற்கு மது தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான போடப்படும் கள்ள ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.
இந்த கள்ள ஒப்பந்தத்தில் மூலம் கொள்ளை அடிக்கும் சிஸ்டத்தை கொண்டு வந்ததே திமுக அமைச்சராக பொறுப்பேற்றபின்பு செந்தில் பாலாஜி தான் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட டாஸ்மார்க் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் அதே அளவு வருமானம் ஊழல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2023-2024 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ள நிலையில், இந்த டாஸ்மாக் மூலம் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று வருடத்தில் சுமார் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கும் என்கிற அடிப்படையில் தற்பொழுது, அமலாக்க துறை அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் மொத்த திமுக கூடாரமும் சிக்கும் சூழல் உருவாகி உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்…