தற்பொழுது டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளது, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற அதிரடி சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்கள் எதிர்பார்த்து வந்தது போன்று, போதுமான ஆதாரங்கள் இந்த சோதனையில் சிக்கி விட்டது என்கிற மகிழ்ச்சியில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை முடிந்து திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அமலாக்க துறை அதிகாரிகள் சோதனைக்கு வருகிறார்கள் என்றால், ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது FIR இருந்தால் மட்டுமே, அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்வார்கள், அப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் டாஸ்மாக் துறையை குறிவைத்து அமலாக்கத்துறை களம் இறங்க முக்கிய காரணமாக, திமுக ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்டு சுமார் 5 FIR தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்ச ஒழிப்பு துறையால் சில கடைகளில் நடந்த சோதனையில், கடைகளில் கணக்கில் வராத பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, இப்படி பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சுமார் 5 FIR பதிவு செய்யப்பட்டது.
அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, செந்தில்பாலாஜி மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மேலும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு, இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில், அதிமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி மீதே வழக்கு பதிவு செய்ய செய்தவர் ஜெயலலிதா.
அந்தவகையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதி, அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பின்பு கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்க்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அதே போன்று தற்பொழுது திமுக ஆட்சியில் பதியப்பட்ட FIR அடிப்படையில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்.
அமலாக்க துறை அதிகாரிகள் கைவசம் சிக்கியுள்ள ஆதாரங்கள் அடிப்படையில், விரைவில் மீண்டும் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமலாக்க துறை தற்பொழுது டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது ஆலைகளை குறிவைத்து நடந்தபட்ட சோதனைக்கு முக்கிய காரணமே திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு தான் என கூறப்படுகிறது.
மேலும் திமுகவில் இணைந்த மிக குறுகிய காலத்தில் திமுக அமைச்சரவையில் முக்கிய இலாக்கா செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது, திமுகவில் இருக்கும் சீனியர் லீடர் பலரும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜிக்கு திமுகவில் முக்கிய துவம் கொடுப்பது, அங்கே இருக்கும் சீனியர் தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இப்படி செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதை பொறுத்து கொள்ள முடியாத திமுகவை சேர்ந்தவர்களே செந்தில்பாலாஜி குறித்த பல தகவல்களையும், குறிப்பாக செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் டாஸ்மாக் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, அமலாக்க துறையில் போட்டு கொடுத்ததே திமுகவினர் தான் என்கிற தகவல் முதல்வர் குடும்பத்தையும் கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.