கடந்த டிசம்பர் மாதம் கரூரில் டாஸ்மாக் தொடர்பான ஒரு மீட்டிங் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் வந்திருக்கிறது, அதாவது டாஸ்மாக் பாட்டில்கள் டாஸ்மாக் கடை மூலமாக விற்கப்படுகிறது. அதேபோன்று கிளப் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூரில் நடந்த கிளப் உரிமையாளர்கள் மீட்டிங்கில், அவர்கள் விற்கப்படும் பாட்டில்களில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் சுமார் 15 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது.
அதற்கு கிளப் தரப்பிலிருந்து, அப்படி கமிஷன் கொடுத்தால் எங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்று மறுத்திருக்கிறார்கள், இதற்கு அப்படி 15 சதவீதம் கமிஷன் தரவில்லை என்றால் அந்த கிளப்புகளுக்கு வரும் குவாட்டர் பாட்டில்கள் சப்ளை செய்யப்பட மாட்டாது, மற்றபடி ஆஃப், ஃபுல் பாட்டில்கள் சப்ளை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள், அதே நேரத்தில் குவாட்டர் பாட்டில்கள் கிளப்புகளில் இல்லை என்றால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரம் இருக்காது.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக கிளப் உரிமையாளர்கள் மேல் இடத்தில் புகார் தெரிவிக்க, அதற்கு அவர்கள் எங்க கையில் ஒன்றும் இல்லை எங்களுக்கு மேல் ஒரு மேலிடம் உள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமிஷன் கொடுக்காத கிளப்புகளுக்கு லைசன்ஸ் ரத்து செய்து விடுவோம் என்றெல்லாம் தகவல் சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பதறி அடித்த கிளப் தரப்பினர் 15 சதவீதம் கமிஷன் தருவதற்கு ஒப்புக் கொள்கிறோம் என்று முன் வந்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று மீட்டிங்கில் பேசிய தரப்புகள் நீங்கள் தவணை முறையில் கூட கமிஷனை கொடுக்கலாம், முதலில் ஒன்பது சதவீதம் கமிஷன் தாருங்கள் மீதத்தை இரண்டாவது தவணையாக கொடுக்கலாம் என்று அஃபர் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் 9% கமிஷன் கூட தங்களால் கொடுக்க முடியவில்லை அந்த அளவுக்கு பொருளாதார சிக்கல் உள்ளது என்று தெரிவிக்கும் உரிமையாளர்களுக்கு.
அவர்களே வட்டிக்கு பணம் கொடுக்கும் வகையில் பைனான்சியர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள், அப்படி கமிஷன் கொடுப்பதற்கு தேவையான கடன் உதவி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படி பல்வேறு முறைகளில் டாஸ்மாக் தொடர்பான ஊழல்கள் வெட்ட வெளிச்சமாக நடந்து வந்து கொண்டிருக்கையில், சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் டாஸ்மாக் துறையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன் அடிப்படையில் சமீபத்தில் நடந்த டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் சில முக்கிய பெண் டிரைவர்கள், டைரி மற்றும் எழுதி வைக்க கூடிய துண்டுத்துண்டு சீட்டுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமார் ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அமலாக்கத் துறை.
அந்த ஆயிரம் கோடி எங்கே சென்றது என்பதையும் கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்ட நிலையில், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தேவையான ஆதாரங்களை அமலாக்கத் துறையினர் தோண்டி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமலாக்கத்துறை சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் சிக்கியுள்ள அந்த டைரியில் சில முக்கிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும்.
அந்த குறிப்புகள் அடிப்படையில் சங்கிலித் தொடர்போல் ஒவ்வொருவரையாக பிடித்து இந்த ஊழல் பணம் எங்கே சென்று இருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அமலாக துறையினர் நெருங்கி விட்டதாகவும், அந்த வகையில் கூண்டோடு ஒரு கூட்டம் இந்த ஊழலில் மாட்டப்பட்டு திகார் சிறையில் அடைப்பது உறுதி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.