தமிழகத்தையே உலுக்கி இருக்கும் டாஸ்மாக்கின் மெகா ஊழல் இந்திய அளவில் பேசும் பொருளாக ஆகும் அளவிற்கு காரணமாக இருந்து வருவதும் திமுக தான். அதாவது இந்த விவகாரத்தை எப்படி மூடி மறைப்பது என்று தெரியாமல் திமுக செய்யும் ஒவ்வொரு செயலும் அது திமுகவுக்கு எதிராக அமைந்து வருகிறது. டாஸ்மாக் மெகா ஊழலை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக, டாஸ்மாக் அலுவலகங்களை முற்றுகையிட போகிறோம் என்று போராட்டத்தை குதித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து டாஸ்மார்க் தலைமை அலுவலகம் அருகே கோஷமிட வைத்துவிட்டு, கடந்து சென்று இருந்தால் இந்த விவகாரம் அப்படியே முடிந்திருக்கும், ஆனால் அதிகாலையே சென்று பாஜக தலைவர்களை கைது செய்தது, மேலும் அண்ணாமலையை கைது செய்த விவகாரங்கள் தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார் என்று தேசிய அளவில் பரபரப்பாக செய்திகள் வெளியான தொடர்ந்து, எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்கின்ற கூடுதல் தகவலோடு, டெல்லியை விட பல மடங்கு தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது என்கின்ற செய்தியும், இந்தியா முழுவதும் வெளியே வந்துள்ளது.
இப்படி தேசிய அளவில் டாஸ்மாக் ஊழல் குறித்து பரபரப்பாக பேசப்படுவதற்கு திமுகவும் காரணமாக அமைந்து விட்டது. அந்த வகையில் மிகப்பெரிய ஊழலில் சிக்கிய திமுக அதில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், மூடி மறைக்கவும் முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் ஊழல் செய்ததும் மட்டுமல்லாமல், என்னுடைய கட்சி மாநில தலைவர் உட்பட மூத்த தலைவர்களை கைது செய்கிறாயா.? என்று உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அமித்ஷா.
உடனே அமலாக்க துறையின் தலைமை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதில் மார்ச் மாத இறுதிக்குள் இந்த டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சம்மன் அனுப்பி சம்மந்தப்பட்டவர்களை தூக்க வேண்டும், என அமலாக்க துறையின் தலைமை அதிகாரிகளுக்கு அமித்சா விடம் இருந்து அதிரடி உத்தரவு வைத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கைது அடுத்த இரண்டு வாரத்தில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில், டாஸ்மாக் ஊழல் தொடர்புடைய டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் தொலைபேசியில் உள்ள பல ரகசியங்களை அவர்களுக்கு தெரியாமலேயே அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை வருடம் சிறையில் இருந்த போது, அப்போது அமைச்சர் முத்துசாமியிடம் டாஸ்மாக் துறை ஒப்படைக்கப்பட்டது.
அப்போது நேரடியாக முதன்மை குடும்பம் நேர் பார்வைக்கு வந்து இருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம், இந்நிலையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ள போன் கால் டேட்டாக்கள் மூலம், டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் முதன்மை குடும்பத்தைச் சேர்ந்த சின்னவக்கும் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரம், போன் கால் டேட்டா மூலம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் விரைவில் ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்ப தயாராகி கொண்டிருக்கும் அமலாக்கத்துறையின் மெயின் டார்கெட் உதயநிதி ஸ்டாலின் தான் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது, அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினை அமலாக்கத்துறை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.