ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி , வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடம் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அதே வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி மீண்டும் அவருடைய ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கலாம் என கூறப்பட்டு வந்தது.
இதற்குள் செந்தில்பாலாஜியை குறி வைத்து டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது அமலாக்கத்துறை. இந்நிலையில் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்க துறை சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடந்த இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

இந்நிலையில் ஏற்கனவே ஒன்றை வருடம் சிறையில் இருந்து பெயிலில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மீண்டும் கைது செய்வதில் எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும், குறிப்பாக கடந்த முறை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது, நெஞ்சு வலிக்கிறது என காவேரி மருத்துவமனையில் படுத்து கொண்டு, ஒரு வழியாக திகார் சிறைக்கு போவதில் இருந்து தப்பித்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வகையில் ஆளும் கட்சியை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு சகல வசதியும் சிறைக்குள் கிடைத்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, ஆனால் இம்முறை செந்தில்பாலாஜியை கைது செய்தால் புழல் சிறை இல்லை திகார் சிறை தான் என்பது கிட்டத்தட்ட உறுதியான பின்பு, அவருக்கு புழல் சிறையில் கிடைத்தது போன்று சகல வசதியும் திகார் சிறையில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
மேலும் ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மீண்டும் சிறைக்கு செல்ல இருப்பது, ஒரு வித மன அழுத்தத்தை கொடுத்து, அதுவும் போக்குவரத்துக்கு துறையில் நடந்த 2 கோடி ஊழலுக்கே ஜாமின் கிடைக்க ஒன்றரை வருடம் ஆனது, தற்பொழுது டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழலுக்கு ஜாமின் கிடைக்க எத்தனை வருடமோ.? என்கிற விவாதமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பின்பு தான் கொங்கு மண்டலத்தில் ஒண்ணுமே இல்லாத திமுகவுக்கு உயிர் கொடுத்து வருகிறார், அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் சுமார் 22 தொகுதிகளை கையில் எடுத்து வேலை செய்து வரும் செந்தில் பாலாஜி. தான் கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக்கு காரணமாக இருப்பதால் தான் தன்னை ஒரு வேலை டார்கெட் செய்கிறார்கள் என்பதால்.
டெல்லியில் உள்ள முக்கிய புள்ளி மூலம், தான் தீவிர அரசியலில் இருந்தே கூட விலகிவிடுகிறேன், என்னை விட்டு விடுங்க என டெல்லி மேலிடத்திற்கு தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி மேலிடமோ செந்தில் பாலாஜி அனுப்பிய தூதுக்கு செவி சாய்க்கவில்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்த நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜி மூலம் முதன்மை குடும்பத்தை அமலாக்க துறை டார்கெட் வைத்துள்ளதாகவும்.
டாஸ்மாக்கில் நடந்த 1000 கோடி ஊழல் பணம் எங்கே சென்றது என செந்தில் பாலாஜி முதன்மை குடும்பத்தை போட்டு கொடுத்தால், அவர் தப்பிப்பார் என்றும் அல்லது முதன்மை குடும்பத்துக்காக தன்னை தியாகியாக்கி கொள்ள தயாராக இருந்தால் அவர் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும், இதில் தப்பிக்கவே முடியாதபடி அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், ஏற்கனவே 5 கட்சி தாவி வந்த செந்தில்பாலாஜி முதன்மை குடும்பத்தை போட்டு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.