திமுக 4 அமைச்சர்களுக்கு சிறை உறுதி… மொத்த டேட்டாவும் அமித்ஷா கையில் கொடுத்த அண்ணாமலை…

0
Follow on Google News

தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை பின்னணியில் பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய காரணமாக இருந்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகங்கள், மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு உற்பத்தி செய்யும் மதுபான ஆலைகளை மட்டும் குறி வைத்து நடத்திய அமலாக்கத்துறை சோதனையின் பின்னணியில் அண்ணாமலையின் பங்கு மிகப் பெரிய அளவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் சிவராத்திரி பண்டிகையை கொண்டாடும் விதமாக கோவை வந்த அமித்ஷாவை, பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதாவது 2026ல் மீண்டும் திமுக வரக்கூடாது, அதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து அமித்ஷா – அண்ணாமலை இடையில் ஆலோசனை நடைபெற்று இருக்கிறது.

அப்போது திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது அவர்கள் கைவசம் இருக்கும் ஊழல் பணம்தான் என்பதை அண்ணாமலை அமிர்தாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும் இந்த வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் நிதியாக மிகப்பெரிய அளவில் டாஸ்மாக்கில் நடக்கும் மிகப்பெரிய ஊழல் பணம் மற்றும் குறிப்பிட்ட மதுபான ஆலைகளில் கமிஷன் அடிப்படையில் திமுக கட்சிக்கு நிதியாக செல்வது, போன்ற பல தகவல்களை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

அது மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலத்தை பொறுத்த அளவு அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 22 தொகுதிகளில் கையில் எடுத்து, அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் மிகப்பெரிய அளவில் பணத்தை வாரி இறைத்து 2026 தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதற்கான மிக தீவிரமாக களமிறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார். என்கின்ற தகவலையும் அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் திமுக மீது கோபமும், எதிர்ப்பும், இருந்தாலும் கூட , தங்கள் கைவசம் இருக்கும் ஊழல் பணத்தை வைத்து வரும் 2026 தேர்தலை வெற்றி பெற்று விடுவோம் என்கின்ற திட்டத்துடன் திமுக தீவிரமாக களம் இறங்கி வேலை செய்கிறது. அந்த வகையில் திமுகவுக்கு செல்லும் ஊழல் பணத்தையும், திமுக கட்சிக்கு செல்லும் நிதியையும் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால், வரும் 2026 தேர்தலை திமுகவை எதிர்கொள்ள ஈசியாக இருக்கும் என்கின்ற ஒரு தகவலையும் அமித்ஷாவுடன் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

மேலும் ஏற்கனவே அண்ணாமலை தயாரித்து வைத்திருந்த டிஎம்கே பைல்ஸ் குறித்த தகவலையும் அமித்ஷாவுடன் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. இந்த நிலையில் திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் அரங்கேறி வரும் இலக்காகவான டாஸ்மாக் இலக்காவை குறிவைத்து, அதுவும் அமித்ஷா கோவை வந்த பின்பு அமலாக்கத்துறை இறங்கியுள்ளது, தமிழக அரசியலில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடந்த சோதனையில், மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடித்துள்ள அமலாக்கத்துறை, குறிப்பாக திமுக கட்சிக்கு இந்த ஊழல் பணம் நிதியாக சென்று உள்ளதையும் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது, அந்த வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமலாக்கத்துறை இறங்கிருக்கும் நிலையில், குறிப்பாக வரும் 2026 தேர்தலுக்கு முன்பு சுமார் நான்கு திமுக அமைச்சர்கள் ஆவது சிறையில் இருப்பார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here