ஆண்டுக்கு சுமார் 44 ஆயிரம் கோடி வருமானத்தை அரசாங்கத்திற்கு ஈட்டி கொடுக்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் மூலம் சபல கோடி ரூபாய் கலால் வரி செலுத்தாமல் கருப்பு பணமாக பதுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 14 ஆலைகளில் இருந்து மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை வாங்கி, மதுபான ஆலைக்கு கொடுக்கப்பட்டு, மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் அரசு டாஸ்மாக் குடோனுக்கு அனுப்பப்படுகிறது. இப்படி மதுபான ஆலையில் தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் அங்கு இருக்கும் அதிகாரிக்கு தெரியாமல் ஒரு பாட்டில் கூட டாஸ்மாக் கடைகளுக்கு தவிர்த்து வேறு எங்கும் சப்பளை செய்யப்பட முடியாது.

இந்த நிலையில் சமீபத்தில் எஸ் என் ஜெ உட்பட நான்கு மதுபான உற்பத்தி ஆலைகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில், மது பான ஆலையில் இருந்து மாதம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் மது பாட்டில்களின் எண்ணிக்கையும், டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஆலையில் இருந்து எவ்வளவு மது பாட்டில்களை கொள்முதல் செய்துள்ளது என்ற இந்த இரண்டு எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, மிகப்பெரிய அளவில் வித்தியாசத்தை அமலா த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மதுபான ஆலைகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மது பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்று கணக்கு இருந்தால், டாஸ்மாக் நிறுவனத்தில் வெறும் ஐம்பதாயிரம் பாட்டில்கள் மட்டுமே கொள்முதல் செய்துள்ளோம் என்கின்ற கணக்கு இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து உள்ள நிலையில். மீதம் 50,000 பாட்டில்கள் எங்கே சென்றது.? அதில் விற்கப்பட்ட பணம் யாருடைய கஜானாவிற்கு சென்றது என்பதை தான் தற்பொழுது தோன்றி எடுத்து வருகிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
மிகப்பெரிய அளவில் நடந்த ஊழலில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்துள்ள நிலையில், அரசாங்கம் முத்திரை பதித்து எப்படி போலியாக மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்டது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது டாஸ்மாக் பாட்டில்களில் இருக்கும் ஹலால் ஸ்டிக்கர் கணக்கில் வரப்படாத பாட்டில்கள் மீதும் ஒட்டப்பட்டு விற்பனை செய்துள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வரப்படாத பெரும்பாலான பாட்டில்கள் டாஸ்மாக் கடைகள் மூலமும், மனமகில் மன்ற மூலமும், எஃப் எல் 3 மூலமும் விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குறிப்பாக டாஸ்மாக் கடை 10 மணிக்கு அடைத்து விட்டால், அதற்கு மேல் பிளாக்ஹில் விற்கப்படும் பாட்டில்கள் அனைத்துமே இதுபோன்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு கணக்கில் காட்டப்படாத பாட்டில்கள் தான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில மது ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சுமார் ஒரு லட்சம் பாட்டில்களை அனுப்பி வைத்துவிட்டு, நாங்கள் வெறும் ஐம்பதாயிரம் பாட்டில்தான் அனுப்பினோம் என்று கணக்கு காட்டப்பட்டதில், அமலாக்கத்துறை விஞ்ஞான முறையில் அந்த தவறை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது ஐம்பதாயிரம் பாட்டில் தயாரிப்பதற்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படும் என்பதை நன்கு உணர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.
50,000 பாட்டில்தான் தயாரித்து உள்ளோம் என்று கணக்கு காட்டும் மதுபான ஆளையில் சுமார் ஒரு லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் அளவிற்கு மின்சாரம் பயன்படுத்திருப்பதை அறிந்து கொண்டு, இபி பில் மூலம் மாதம் எவ்வளவு பாட்டில்கள் தயாரித்து இருப்பார்கள் என்பதையும் அமலாக்கத்துறை கணக்கிட்டு வருவதால் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, அந்த வகையில் மிகப் பெரிய அளவில் நடந்துள்ள இந்த ஊழல் யாருடைய கஜானாவிற்கு சென்றுள்ளது என்பதை அமலாக்கத்துறை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கூண்டோடு மொத்தமாக தட்டி தூக்க இருக்கிறது அமலாக்கத்துறை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.