அறிவாயத்துக்கு சென்ற ஊழல் பணம்… அமலாக்க துறையில் சிக்கிய ஆதாரம்..

0
Follow on Google News

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை குறிவைத்து சுமார் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிரடி சோதனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. தனியார் மதுபான ஆலை மற்றும் டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மேலும் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளதையும் கண்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 20 தனியார் மது பான ஆலையில், குறிப்பிட்ட சில அலைகளில் மட்டும் அதிக மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டதை அமலாக்க துறையினர் கண்டுபிடித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த மதுபான அலைகளில் நடந்த அதிரடி சோதனையில், மாதம் எத்தனை கேஸ் அந்த ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது, இதில் இருந்து மொத்தம் எவ்வளவு லாபம் அந்த மதுபான ஆலைக்கு கிடைக்கிறது போன்ற தகவல்களை சேகரித்த அமலாக்க துறை அதிகாரிகள்.

ஏற்கனவே கொள்முதல் செய்யப்படும் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்குவதை பெருமளவு குறைந்துள்ள டாஸ்மாக் நிறுவனம், புதியதாக மிக குறைந்த அளவு மது பாட்டில்கள் வாங்கப்பட்ட மது ஆலைகளில் தற்பொழுது அதிக அளவில் மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்த வகையில் இப்படி அதிகமாக மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படும் மதுபான ஆலைகள் எப்படி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் எடுத்தது, உற்பத்தி அடிப்படையிலா,.? அல்லது தரமான தயாரிப்பின் அடிப்டையிலா.? அல்லது வேறு எதாவது ஒரு வகையிலா.? ,அதாவது வேறு ஒரு வகையில் என்றால், லஞ்சம் கொடுத்து ஆர்டர் எடுத்தார்களா, அல்லது ஒரு பெட்டிக்கு இவ்வளவு கமிஷன் என திமுக கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என அமலாக்க துறை சோதனையின் போது தோண்டி எடுத்து இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

இப்படி ஒவ்வொரு மதுபான ஆலையில் இருந்து மாதம் ஆளும் திமுகவின் கட்சி நிதியாக எத்தனை கோடி செல்கிறது என்கிற கணக்கையும் இந்த சோதனையில் தோண்டி எடுத்துள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். அதாவது சுமார் 55 லட்சம் கேஸ் மாதம் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதில் பெறுபகுதியாக சுமார் 18 லட்சம் கேஸ் SNJ மதுபான ஆலையில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இபப்டி மொத்தம் 20 மதுபான ஆலைகளில் குறிப்பாக அதிகம் கொள்முதல் செய்யப்படும் முக்கிய 4 அலைகளில் இருந்து தான் அதிகமான நிதி திமுக கட்சிக்கு சென்றுள்ளதாக அமலாக்க துறையினர் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சரியாக திமுக கட்சி நிதி கொடுக்காத மதுபான நிறுவனம், மற்றும் குறைந்த அளவு நிதி கொடுக்கும் மது ஆலைகளில் கொள்முதல் செய்வதை குறைந்து கொண்டு.

எந்த நிறுவனம் கமிஷன் அடிப்படையில் அதிக அளவு திமுக கட்சிக்கு நிதி கொடுக்கிறதோ அந்த மதுபான ஆலைகளில் அதிக அளவு மது பாட்டில்கள் கொள்முதல் செய்து வருவதற்காக சில குறிப்புகள் அமலாக்க துறை அதிகாரிகள் கையில் சிக்கியுள்ளதாகவும், மேலும் சில மதுபான ஆலைகளில் மிக குறைந்த அளவு மது பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்வதால், சம்பந்தப்பட்ட அந்த மது பான ஆலை தரப்பில் இருந்து தான் அமலாக்கத்துறையினருக்கு, தகவல் கொடுத்து, அதாவது அதிகளவு திமுகவுக்கு கமிசன் கொடுப்பதால், குறிப்பிட்ட இந்த ஆலைகளில் அதிக அளவு மது கொள்முதல் செய்யப்படுகிறது என்று நடக்கும் முறைகேடுகளை போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், திமுகவுக்கு கட்சி நிதியாக எவ்வளவு சென்றுள்ளது என்கிற ஆதாரத்தின் அடிப்படையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயத்துக்குள் அமலாக்கத்துறையினர் புகுந்து சோதனை நடத்தலாம் என்கிற தகவல் முதல்வரை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here