உலகிலே பஞ்ச பூதங்களில் ஊழல் செய்ய கூடிய கட்சி என்கிற பெருமையை பெற்ற ஒரே கட்சி திமுக தான் என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. அதை நிருபிக்கும் வகையில் அமைத்துள்ளது சமீபத்தில் வெளிவந்துள்ள டாஸ்மாக் மெகா ஊழல், சுமார் 1000 கோடி டாஸ்மாக் ஊழல் என அதிகாரபூர்வமாக அமலாக்க துறை அறிவித்துள்ளது, ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இதுக்கே ஷாக் ஆனால் எப்படி.? இது வெறும் ட்ரைலர் தான் , திமுக ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், அடுத்தடுத்து வரும் நாட்களில் இது குறித்த விவரம் தெரியவரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையின் சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் பல விசயங்களை தோண்டி எடுத்து வருகிறார்கள் அமலாக்க துறை அதிகாரிகள்.

குறிப்பாக உந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ள அமலாக்க துறை. சுமார் ஒன்றரை லட்சம் கோடி தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் ஊழல் நடந்துள்ளது. இந்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு, திரும்ப இந்தியா கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் டாஸ்மாக் ஊழலில் கிடைத்த பணம் சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் மணி லாண்டரிங் நந்ததுள்ளது என்பதை மத்திய உளவு துறையிடம் ஆலோசித்த அமலாக்க துறை.
எந்தத்த நாடுகளில் எப்படியெல்லாம் யார் மூலம் ஊழல் பணம் பாதுக்கப்பட்டு வருகிறது என்கிற பட்டியலையும் மத்திய உளவு துறையிடம் கொடுத்த அமலாக்க துறை, இது குறித்த கூடுதல் தகவல் தங்களுக்கு வேண்டும் என மத்திய உளவு துறை உதவியை அமலாக்க துறை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி கைவசம் இருக்கும் டாஸ்மாக் துறையை குறிவைத்து சமீபத்தில் நடந்த அமலாக்க துறை சோதனை போன்று, விரைவில் செந்தில் பாலாஜி கைவசம் இருக்கும் மற்றொரு துறையான மின்சார துறையை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், மின்சார துரையில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதில் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடத்திருப்பதற்காக ஆதாரம் அமலாக்க துறை கையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ள அமலாக்க துறை, முதன்மை குடும்பத்தின் பினாமிகள் யார் என்பதை கண்டறிந்த அவர்களை கடந்த 6 மதத்திற்கு மேலாகவே தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது கோபால புரம் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருக்கும் கம்பெனியின் வங்கி கணக்குகளின் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த பண பரிவர்த்தனைகள்,மற்றும் பினாமிகள் என்று அமலாக்க துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் வங்கி கணக்குகளின் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த பண பரிவர்த்தனைகள் இவை அணைத்து டேட்டாக்களையும் அமலாக்க துறை அதிகாரிகள் கையில் எடுத்துள்ள நிலையில்,
விரைவில் பினாமிகள் குறிவைத்து விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பினாமிகள் யாராவது ஒருவர் , ஏதாவது உளறினால் கூட, நம்ம மாட்டி கொள்வோம் என கோபாலபுரம் தரப்பு கடும் பீதியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குள் டாஸ்மாக் ஊழல் தொடர்பில் இருக்கும் பலருடைய வங்கி கணக்குகள் முடக்கவும், உளவு துறை உதவியுடன் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்றவும் அமலாக்க துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.