அமித்ஷாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவு… திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் அமலாக்கத்துறை…

0
Follow on Google News

தற்பொழுது தமிழகத்தில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னணியில், முதல்வர் மு க ஸ்டாலின் தேவையின்றி பாஜகவை சீண்டி, குடைச்சல் கொடுக்க முயற்சித்து தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில், தேசிய கல்வி கொள்கை எதிராக, இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரானது என்கின்ற பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்தது. மேலும் குறிப்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு தேசிய கல்விக் கொள்கைக்கான நிதி வழங்கப்படாது என்று சொன்னதை திரித்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தர மாட்டேன் என்கிறார்கள் என்று தமிழக மக்களை மத்தியில் மத்திய அரசுக்கு எதிராக திருப்பும் வேலையை செய்தது திமுக.

மேலும் தொகுதி மறு சீரமைப்பு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது, அப்படி இருக்கையில் தொகுதி மறு சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்தது, இப்படி தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் பாஜகவுக்கு எதிராக திமுக அரசியல் செய்து வந்தது டெல்லி பாஜக தலைமையை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிரான அரசியலை திமுக ஒரு பக்கம் தீவிர படுத்த, ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களை தூசி தட்ட முடிவு செய்தது டெல்லி பாஜக, குறிப்பாக சமீபத்தில் கடந்த அமலாக்கத்துறை அதிரடி சோதனைக்கு 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமித்ஷா, விரைவில் அமலாக்கத்துறை சோதனை வரும் என்பதை மறைமுகமாக ஐந்து அமைச்சர்களை எச்சரிக்கும் விதமாக பேசிச் சென்றார்.

அதில் சட்ட விரோத செம்மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர், நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட ஒருவர், மேலும் 6 கோடிக்கு மேல் சி ஆர் ஐ டி பி திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர், மற்றும் வேலைக்காக பண மோசடிவியில் ஈடுபட்ட ஒருவர் என்று பெயரை குறிப்பிடாமல் அமித்ஷா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது திமுக அமைச்சர்களின் புகார்களை தூசி தட்டி அமலாக்கத்துறை சோதனையின் மூலம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறது மத்திய பாஜக . இதன் மூலம் அவர்கள் 2026 தேர்தலில் முழுமையாக ஈடுபடாமல் தங்களுடைய வழக்கில் இருந்து எப்படி தப்பிப்பது என்றுதான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

மேலும் இந்த அமலாக்கத்துறை சோதனை மூலம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி திமுக தரப்புக்கு ஏற்பட்டு வரும் 2026 தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்க முடியாத ஒரு சூழலை உருவாக்க உருவாக்க முடியும் என்கின்ற திட்டத்துடன் அதிரடியாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து அமைச்சர்கள் இனிவரும் காலங்களில் அமலாக்கத்துறை சோதனையில் சிக்குவார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here