முக ஸ்டாலினுக்கு எதிராக பொன்முடியுடன் கைகோர்த்த துரைமுருகன்.. 2026ல் திமுகவை வீழ்த்த திட்டம்…

0
Follow on Google News

சமீபத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய இருவரும் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் மூத்த அமைச்சர் துரைமுருகனின் இலக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடியவர் திமுகவின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன். அவர் கைவசம் நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை ஆகிய இரண்டு துறைகள் இருந்த நிலையில், தற்போது அவரிடம் இருந்த கனிமவள துறையை பறித்து அமைச்சர் ரகுபதியிடமும், ரகுபதி இடம் இருந்த சட்டத்துறையை பறித்து அமைச்சர் துரைமுருகனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் இழக்காவை மாற்றும் அளவிற்கு துரைமுருகன் மீது முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அப்படி என்ன கோபம் என்கின்ற பின்னணியும் வெளியாகி இருக்கிறது. அதாவது பொன்முடி சைவம் வைணவம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய போது, அவரை கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பொதுவாகவே பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் கட்சி நிர்வாகிகளை நீக்குவது மற்றும் மீண்டும் இணைக்கும் அறிக்கைகள் வெளியாகும். ஆனால் இந்த முறை முதல்வர் மு க ஸ்டாலின் பெயரிலே வெளியானதை தொடர்ந்து முதல்வருக்கும் துரைமுருகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.

அந்த வகையில் பொன்முடி சர்ச்சை கூறிய வகையில் பேசிய அப்போதே மாற்றுத்திறனாளி குறித்து துரைமுருகன் பேசிய பேச்சு ஏற்கனவே துரைமுருகன் மீது இருந்த கோபம் முதல்வருக்கு அதிகரித்தது. இந்த நிலையில் பொன்முடியை போன்று துரைமுருகனை அவ்வளவு எளிதாக கட்சி பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ தூக்கி விட முடியாது. அந்த அளவுக்கு திமுகவின் மிக மூத்த தலைவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் அமைச்சர் துரைமுருகன்.

இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தென்காசி, கோவையில் கனிம வளம் கொள்ளை நடப்பது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லையா.? என்று, அதாவது திமுக ஆட்சியில் நடக்கவில்லை என்று பேசாமல், அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லையா என்று பேசியது, அப்படியானால் அதிமுக ஆட்சியில் நடந்தது போன்று, திமுக ஆட்சியிலும் கனிமவள கொள்ளை நடக்கிறது என்று தான் துரைமுருகனின் பேச்சு அமைந்திருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே துரைமுருகன் மீது கடும் கோபத்தில் இருந்த முதல்வர் மு க ஸ்டாலின், துரைமுருகன் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க மாட்டாரா? அதை வைத்து அவரின் கைவசம் இருக்கும் செல்வம் செழிக்க கூடிய கனிமவள துறையை பிடுங்கி விட வேண்டும் என்று சமயம் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சட்டசபையில் துரைமுருகன் பேசிய சர்ச்சை பேச்சை வைத்து தற்பொழுது துரைமுருகனின் கைவசம் இருந்த கனிமவள துறையை பறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே பொன்முடியை திமுகவிலிருந்து முதல்வர் ஓரங்கட்டி இருக்கிற நிலையில், தற்போது துரைமுருகனையும் ஓரங்கட்டி இருக்கிறார், அந்த வகையில் தற்பொழுது திமுக தலைவர் முதல்வருக்கு எதிராக துரைமுருகன் பொன்முடி ஆகியோர் கைகோர்த்து உள்ளதாகவும். சட்டசபை தேர்தலில் திமுகவுகுள் உட்க்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டி திமுகவின் மூத்த அமைச்சர்களே முதல்வர் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக திமுகவை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here