திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் னுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய திமுகவின் நம்பர் 2 என்று அழைக்கக்கூடிய திமுகவின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை இலக்கா அவரிடமிருந்து பறிக்கப்பட்டது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அவசியம் என்ன வந்தது என்கின்ற விவாதம் அனல் பறந்து கொண்டு இருக்கையில்.
துரைமுருகன் குறித்து மு க ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற அதிர்ச்சிகரமான ஒரு உளவுத்துறை ரிப்போர்ட் தான் துரைமுருகனின் இலக்கா பறிக்கப்பட்டு அவரை திமுகவிலிருந்து ஓரம் கட்டும் முடிவுக்கு வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தொடர்ந்து அமலாக்க துறை பிடியில் திமுகவின் மூத்த அமைச்சர்களும் முக்கிய தலைவர்களும் சிக்கி வரும் நிலையில், கனிமவள ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை பிடியில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.

மேலும் அமைச்சர் துரைமுருகனின் பழைய வழக்குகளை தூசி தட்டி விசாரிக்க தொடங்கி இருக்கிறது நீதிமன்றம், இந்த நிலையில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலும் தங்களை காப்பாற்றிக் கொள்ள திரை மறைவில் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகனும் பாஜகவுடன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கள்ள உறவில் இருந்து வருகிறார் என்கின்ற தகவல் முதல்வர் கவனத்திற்கு உளவுத்துறை மூலம் ரிப்போட்டாக சென்றிருக்கிறது.
அதாவது சமீபத்தில் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்ட போது கூட இரவோடு இரவாக அவசர அவசரமாக துரைமுருகன் டெல்லி பயணம் சென்றார். அது கூட பாஜகவின் சில முக்கிய தலைவர்களை சந்தித்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் என்கின்ற தகவலும் முதல்வர் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
அதே நேரத்தில் துரைமுருகன் மட்டுமல்ல திமுகவைச் சேர்ந்த சுமார் ஆறு அமைச்சர்களும் சில திமுக எம்பி களும் பாஜகவுடன் நெருக்கமான திரை மறைவு தொடர்பில் இருந்து வருவதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் முதல்வருக்கு மு க ஸ்டாலினுக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவும் தங்கள் உடன் நெருக்கம் காட்டும் திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோரை ஆகியோருடன் நட்பு பாராட்டி வருவதாகவும்.
எதிர்காலத்தில் இவர்களை பயன்படுத்தி தான் திமுகவை உடைக்க வேண்டும் என்கின்ற திட்டமும் பாஜகவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை என்றால், தி.மு.கவில் துரைமுருகன் போன்றோரை வைத்து எப்படி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிகசேனாவை உடைத்து சிவசேன ஆட்சியை பாஜக கவிழ செய்ததோ, அதேபோன்று துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை வைத்து, 2026ல் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் திமுகவை உடைக்கும் திட்டத்துடனே பாஜகவும் அவர்களுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திமுகவை விட்டு வெளியேறி பாஜக உடன் இணைந்தாலும் எப்படியும் பாஜக தான் ஆட்சி அமைக்க போகிறது, அந்த வகையில் அங்கே சென்றாலும் அமைச்சர் பதவி தான் கிடைக்கும், மேலும் தங்களை காப்பாற்றிக்கொள்ள பாஜக பக்கம் தாவுவதற்கு தயாராகவே மூத்த அமைச்சர்கள் மனநிலை அப்போது இருக்கும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜகவுடன் கள்ள உறவில் இருக்கும் திமுக மூத்த தலைவர்கள் முக்கிய அமைச்சர்கள் சீட்டு கொடுக்காமல் ஓரங்கட்ட வேண்டும் என்ற முதல்வரின் முதல்வர் ஒரு பக்கம் ஆலோசனை நடத்தினாலும், அதற்கெல்லாம் வழி இல்லை, எப்படியும் தங்களுடைய ராஜதந்திர மூலமாக மிரட்டி திமுக வில் சீட்டு வாங்கி விடுவார்கள் பாஜகவிடம் தொடர்பில் இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.