திமுக எம்பி ஆ ராசா தாமரை சின்னத்தில் வாக்களிக்க தயார் என தெரிவித்துள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக திமுக எம்பி ஆ.ராசா.. பாஜக கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியிடம் நான் கேட்கிறேன்.. தமிழக உரிமைக்காக அமித்ஷாவின் சட்டையைப் பிடித்து உலுக்கும் தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய ஆ.ராசா.
ஜெயலலிதா, இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றாரே அது என்னவாயிற்று? தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி நிதியை உடனடியாக பெற்றுத்தருவோம் எனக் கூறத் தயாரா? இதனையெல்லாம் கூறினால் தாமரைக்கும், இரட்டை இலைக்கும் நான் எனது இரண்டு கையாலும் ஓட்டுப்போடுகிறேன். தவறாகப் போடும் ஒரு ஓட்டால் தமிழகம் விடியும் என்றால், அதனைச் செய்ய தயாராக உள்ளேன் என ஆ. ராசா பேசி இருந்தார்.

இந்த நிலையில் ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஸ்டாலினின் முதுகில் குத்த காத்திருக்கும்திமுகவின் “ஷிண்டே” வாகும் ஆ.ராசா என் குறிப்பிட்டவர், மேலும் தமிழகத்திற்கு விடிவு கிடைக்கும் என்றால் தாமரைக்கு ஓட்டு போட தயார் என்று சேம்சைட் கோல் அடித்திருக்கிறார் 2ஜி புகழ் ஆராசா, ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாட்டுப் படித்து விட்டு….
இன்று 4 ஆண்டு முடிந்தவுடன் “விடியலா …. அப்டீன்னா ” என்ன என்று கேட்ட ஆ.ராசாவின் மனத்திண்மைக்கு பாராட்டுகள் என தெரிவித்த எஸ் ஆர் சேகர். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், பாதியை நிறைவேற்றி இருந்தாலே… போனால் போகட்டும் என்று பாவம் பரிதாபப்பட்டு .. உதயசூரியனுக்கு வாக்களிக்க
ஒரு வேளை மக்கள் சிந்திக்கலாம்…… ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு சுயதம்பட்டம் … தற்புகழ்ச்சி மற்றும் வெற்று விளம்பர ஆட்சியை நடத்திவிட்டு…. இப்போது பாஜகவும் அதிமுகவும் விடிவுகாலம் கொடுக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ராசா என தெரிவித்த எஸ் ஆர் சேகர்.
மேலும் காசா பணமா .. நாம் பாட்டுக்கு அடித்து விடுவோம் என்று பேசுவதற்கு இது ஒன்றும் திமுகவின் மா.செ.க்கள் கூட்டம் அல்ல தமிழக உரிமைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சட்டையை பிடித்து உலுக்கும் தைரியம் இபிஎஸ் அவர்களுக்கு இருக்கிறதா என்று பொங்குகிறார் ? அதே தமிழக உரிமையான காவிரியை பற்றி, கர்நாடக துணை முதல்வரிடம் பேச பயந்து நடுங்கிய ஸ்டாலினின் சட்டையை உலுக்கும் தைரியம் ராசாவுக்கு உள்ளதா ? என கேள்வி எழுப்பிய எஸ் ஆர் சேகர்.
தமிழகத்தை குப்பை கிடங்கு போல நினைத்து கேரள குப்பையை இங்கு கொட்டும் கேரளாவை கண்டித்து… தோழமைக் கட்சியான கம்யூனிஸ்ட் முதல்வரின் சட்டையை பிடித்து உலுக்கும் தைரியம் ராசாவுக்கு உள்ளதா ? நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என்ற போலி வாக்குறுதியை கொடுத்துவிட்டு… இப்போது அது சாத்தியமே இல்லை என்று சட்டசபையில் சரண்டரான முதல்வரின் மகன் உதயநிதி சட்டையை பிடித்து உலுக்கும் தைரியம் ராசாவுக்கு உள்ளதா ? என கேள்வி எழுப்பிய எஸ் ஆர் சேகர்.
மேலும் அட தமிழக உரிமைகளை எல்லாம் விட்டு விடுங்கள்….தன் சொந்த உரிமையாவது ஆ ராஜா மீட்பாரா ? பெரம்பலூர் தொகுதியை சேர்ந்த ஆ ராசாவை… ஒரு பொதுத் தொகுதியில் நிற்க வைக்க மனமில்லாமல் நீலகிரி தொகுதிக்கு மாற்றிய… அந்த அறிவாலய குடும்பத்தினர் யாராவது ஒருவரின் சட்டையை அல்லது சேலையை பிடிக்கும் துணிச்சல் ராசாவுக்கு உள்ளதா ? மேலே சொன்னதை நடத்தி
காட்டக் கூட தேவையில்லை…. என்னால் இவர்களின் சட்டையைப் பிடித்து இழுக்க முடியும் என்று ராஜா சொன்னாலே கூட, நாங்களும் உதயசூரியனுக்கு ஓட்டு போடுவதை பற்றி யோசிக்கிறோம் ! எங்கள் சவாலை ஏற்கத் தயாரா … ஆ..ராசா அவர்களே. என தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.