தேவரை அவமதித்த ஸ்டாலின்..! இவ்வளவு வெறுப்பு இருந்தால் தேவர் நினைவிடத்துக்கு ஸ்டாலின் ஏன் வரவேண்டும்.? வீடியோ உள்ளே…

0
Follow on Google News

பசும்பொன் முத்துராமலிக்க தேவர் 113வது குரு பூஜை நேற்று கொண்டாடப்பட்டது, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்துக்கு அணைத்து அரசியல் கட்சி தலைவர்கம் வந்து மரியாதை செய்துவிட்டு சென்றனர், திமுக தலைவர் முக ஸ்டாலின் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை செய்தார், இந்நிலையில் பசும்பொன் நினைவிடத்தில் ஸ்டாலின் தேவரை அவமதித்த செயல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை கடவுள் மறுப்பாளராக வெளிப்படுத்தும் ஸ்டாலின், இஸ்லாம் நிகழ்ச்சியில் குல்லா அணிந்து பங்கேற்பதும், கிருஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம் ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் நெற்றியில் வைக்கப்பட்ட விபூதியை உடனே அழித்து விடுவார், இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைக்கப்பட்ட விபூதியை உடனே அழித்த ஸ்டாலின், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வைக்கப்படும் விபூதியை என்ன செய்ய போகிறார் என தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருந்தது.

இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில் பசும்பொன் நினைவிடம் சென்ற திமுகவினர் அனைவரும் அங்கே தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்திய பின், அனைவருக்கும் விபூதி கொடுக்கப்பட்டது, ஆனால் அந்த விபூதியை ஸ்டாலின் நெற்றியில் அணியாமல், தூசியை தட்டுவது போன்று கீலே தட்டிவிடுகிறார், பின் கீழே தட்டிவிடப்பட்ட விபூதி மீது அங்கே இருந்தவர்கள் நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஈவேராவை மற்றும் திராவிட கொள்கைகளை கடுமையாக எதிர்த்த பசும்பொன் தேவர் மீது ஈவேரா மற்றும் திராவிட கொள்கையை தாங்கி பிடிக்கும் முக ஸ்டாலினுக்கு எவ்வளவு கோவம் இருந்தால் எதற்காக பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும் தேவரை அவமதித்த முக ஸ்டாலின் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும். இனி வரும் காலங்களில் எங்கள் ஐயாவை அவமதித்த ஸ்டாலின் பசும்பொன் கிராமத்துக்குள் நுழைய கூடாது என முக்குலத்தோர் சமூகத்தினர் கூறி வருகின்றனர்.