நாடாளுமன்றத்தில் அசிங்கப்பட்ட திமுக எம்பிக்கள்… ஒழுங்கு மரியாதையா வெளியில் போங்க…

0
Follow on Google News

பாராளுமன்றத்தில் தினமும் எதோ ஒரு வகையில் திமுக எம்பிக்கள் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். மத்திய கல்வி அமைச்சர் திமுக எம்பிக்கள் நகரிக்கமற்றவர்கள் என்று பேசியதற்கு பொங்கிய திமுக எம்பிகளுக்கு பதிலடி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்களை நகரிக்கமற்றவர் என்று சொன்னதற்கே இப்படி கோபம் அடைகிறீர்களே, தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன ஒருவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றவர்கள் தானே நீங்கள் என நிர்மலா சீத்தாராமன் தரமான பதிலடி கொடுத்து திமுக எம்பிக்கள் வாயை அடைந்தார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் வாசகங்களுடன் டி-சர்ட் அணிந்த வந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்களில் அமளியில் ஈடுபட்டனர், இதனை தொடர்ந்து, வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்த எம்.பிக்களை சபையை விட்டு வெளியேறி, கண்ணியத்தைக் காக்கும் வகையில் சரியான உடையுடன் திரும்பி வருமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், நாடாளுமன்ற விதிகள், கண்ணியத்திற்கு எதிரானது என தெரிவித்த சபாநாயகர் பிர்லா, சபை விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் செயல்படுகிறது. உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்தையும், மரியாதையையும் பராமரிக்க வேண்டும். ஆனால் சில எம்.பி.க்கள் விதிகளைப் பின்பற்றாமல், கண்ணியத்தை மீறுகிறார்கள்.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது என திமுக எம்பிகளை எச்சரித்த பிர்லா, வசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்த திமுக எம்.பிக்களை, சபையை விட்டு வெளியே சென்று கண்ணியத்தைக் காத்துக்கொண்டு சரியான உடையுடன் திரும்பி வருமாறு உத்தரவிட்ட சபாநாயகர், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், இதுபோன்ற கண்ணியமற்ற உடையை சபைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாது.

வெளியே சென்று, உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு, சரியான உடையுடன் திரும்பி வாருங்கள்” என்று நாடாளுமன்ற விதிகளை மேற்கோள் காட்டி உறுப்பினர்களிடம் கூறி, சபையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் பிர்லா, இந்நிலையில் மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கவும் திமுக எம்.பி.,க்கள் தினம் தினம் எதாவது ஒரு கூத்தை நடத்தி கொண்டே இருக்கிறார்கள், ஆனால் அவை அனைத்தும் அவர்களுக்கே எதிராக திரும்பி வருகிறது.

அந்த வகையில் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மாண்பை கண்ணியமற்ற ஆடைகளை அணிந்து சென்று அவமரியாதை செய்ததாக இப்போது திமுக எம்.பிக்களுக்கு அவச்சொல் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளிகளில் சீருடை சரியாக அணிந்து வராத மாணவர்களை ஆசிரியர் பள்ளியை விட்டு விரட்டி அடித்து உரிய சீருடை அணிந்து கொண்டு உள்ளே வா, என உத்தரவிடுவது போன்று, நாடாளுமன்ற அவையில் பொருத்தமற்ற ஆடை அணியாமல் பள்ளி மாணவர்களை ஆர்சிரியர் விரட்டி அடிப்பது போல திமுக எம்,.பிக்களை விரட்டியடித்து இருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இது திமுகவுக்கு மிக பெரிய அவ பெயரை ஏற்படுத்தியது மட்டுமில்லமல், தேசிய ஊடகங்கள் திமுக எம்பிக்கள் செயல்களை கேலி கிண்டல் செய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவது இந்தியா முழுவதும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது திமுக மானம். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது அதை பற்றி பாராளுமன்றத்தில் பேச உங்களை ஓட்டு போட்டு டெல்லிக்கு அனுப்பினால், அங்க சென்று கோமாளி தனம் செய்கிறீர்களா என தமிழக மக்களும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here